என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » madavaram
நீங்கள் தேடியது "Madavaram"
மாதவரம்- சிறுசேரி மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்குகிறது. இதற்காக 800 வீடுகள், 162 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. #Metrotrain
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.
பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை வரையிலான பணிகள் நிறைவு பெற்றதையொட்டி வருகிற ஜனவரியில் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது.
2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி வரை 108 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் ரூ. 80 ஆயிரம் கோடி செலவில் தொடங்க திட்டமிடப்பட்டது.
இந்த வழித்தட்டத்தில் 116 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டு நிதி உதவி மூலம் இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய நகர்புற வளர்ச்சி துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மாதவரம் - சிறுசேரி மெட்ரோ ரெயில் பணிக்காக 800 வீடு-நிலங்கள் கையகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 162 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் மெட்ரோ நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
எனவே மாதவரம்- சிறுசேரி மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை வரையிலான சுரங்கப் பாதையில் நடைபெற்று வரும் இறுதிகட்ட கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்தும் கேட்டு அறிந்ததார். அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டம்-1 நீட்டிப்பு பணியான வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை நடந்து வரும் கட்டுமான பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண் இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல், இயக்குநர் (திட்டம்) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #Metrotrain

×

X