என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "madhavaram new bus stand"
சென்னை:
கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதை குறைக்க மாதவரத்தில் நவீன அடுக்கு மாடி பஸ் நிலையம் கட்டப்பட்டது.
இங்கிருந்து ஆந்திர மாநிலம், திருப்பதி, காளகஸ்தி, நெல்லூர், ஐதராபாத் போன்ற நகரங்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த 468 பஸ்கள் மாதவரம் அடுக்கு மாடி பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரூ.95 கோடி செலவில் கட்டப்பட்ட மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையம் கடந்த 10-ந்தேதி திறக்கப்பட்டது.
ஆந்திரா மாநிலத்துக்கு செல்ல கூடிய பயணிகள் மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையத்துக்கு ஒரே ஒரு மாநகர பஸ் மட்டுமே செல்வதால் அவதியடைந்து உள்ளதாக பயணிகள் கூறுகின்றனர்.
சென்னை மாநகரில் இருந்து மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு இரண்டு பஸ்கள் மாற வேண்டியது உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பயணிகள் கூறும் போது, மாதவரத்தில் இருந்து திருப்பதிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் சென்னை நகருக்குள் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் வசிப்பவர்கள். கோயம்பேட்டில் இருந்து மாதவரத்துக்கு செல்பவர்கள். ஆனால் கோயம்பேட்டில் இருந்து மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து 170ஏ, 121 ஆகிய எண்கள் கொண்ட பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம் அருகே செல்கின்றன.
114 எண் மாநகர பஸ் மாதவரம் பஸ் நிலையத்துக்கு எதிரே சென்னை- தடா தேசிய நெடுஞ்சாலையில் நிற்கிறது. அதிலிருந்து பயணிகள் இஎஸ்சி சாலையை கடந்து பஸ் நிலையத்துக்குள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது என்றனர்.
குரோம்பேட்டையை சேர்ந்த பயணி ஒருவர் கூறும் போது, குடும்பத்துடன் திருப்பதிக்கு செல்ல புறப்பட்ட போது மாதவரம் பஸ் நிலையத்துக்கு சென்றடைய இரண்டு பஸ்கள் மாறினோம். ஆனால் நேரடியாக மாநகர பஸ்களை இயக்கினால் டிக்கெட் கட்டணம் இதை விட குறைவாக இருக்கும் பயணமும் எளிதாக இருக்கும் என்றார்.
மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கு சென்னை நகரில் இருந்து செல்ல போதுமான மாநகர பஸ்கள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
இது பற்றி போக்குவரத்து கழக வட்டாரங்கள் கூறும் போது, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாதவரம் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் இயக்குவது கடினமான ஒன்று. ஏனென்றால் கோயம்பேட்டில் இருந்து போதுமான பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோயம்பேட்டுக்கு வந்து நகரில் எந்த பகுதிக்கும் பயணிகள் செல்லலாம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்