search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhya Pradesh Elections"

    மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் இறுதி முடிவினை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. #MadhyaPradeshElections2018
    இந்தூர்:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், 230 இடங்களை கொண்ட பெரிய மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. ஆளும் பாஜகவும் சிறிய எண்ணிக்கை வித்தியாசத்தில் பின்தொடர்ந்தது.

    ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில் நேற்று இரவு நிலவரப்படி காங்கிரஸ் 115 இடங்களில் வெற்றி பெற்றதாக தெரியவந்தது. ஆளும் பா.ஜனதாவுக்கு 108 இடங்கள் கிடைத்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் மெஜாரிட்டியை நெருங்கியபோதும் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநில தேர்தல் இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்துள்ளது. அதில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.



    காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆட்சியமைக்க இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும். எனவே பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது. #MadhyaPradeshElections2018
    மத்திய பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என முதல்வர் சிவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்தார். #MadhyaPradeshElections #ShivrajSinghChauhan
    இந்தூர்:

    பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஓட்டு போட்டனர்.



    வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், புத்னியில் உள்ள நர்மதா நதிக்கரைக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இதையடுத்து வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ் சிங் சவுகான், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என 100 சதவீதம் உறுதியாக நம்புவதாக கூறினார். 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்திருப்பதாகவும், இதற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் பணியாற்றி வருவதாகவும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

    மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், மற்ற பகுதிகளில் மாலை 5 மணிக்கும் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. டிசம்பர் 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. #MadhyaPradeshElections #ShivrajSinghChauhan
    மத்திய பிரதேசத்தில் தற்போதைய எம்எல்ஏக்கள் மற்றும் புதுமுகங்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #MadhyaPradeshElections #Congress #CongressCandidatesList
    இந்தூர்:

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸ் தீவிர களப்பணியாற்றி வருகிறது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் நேற்று முன்தினம் 155 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.

    இந்நிலையில் 16 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் மற்றும் புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். 



    ஷியோபூர் மாவட்டம் விஜய்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ராம் நிவாஸ் ராவத் மீண்டும் போட்டியிடுகிறார். இதுதவிர மகேந்திர சிங் யாதவ், கோபால் சிங் சவுகான், விக்ரம் சிங் நதிராஜா மற்றும் பிரிஜேந்திர சிங் யாதவ் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சிவபுரி தொகுதியில் குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மாநில மந்திரி யசோத்ராஜா சிந்தியாவை எதிர்த்து புதுமுக வேட்பாளரான சித்தார்த் லடா (36)  நிறுத்தப்பட்டுள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியில் இதுவரை 171 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மத்தியப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. #MadhyaPradeshElections #Congress #CongressCandidatesList
    ×