search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MahatmaGandhi"

    மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினமான இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். #MartyrsDay #MahatmaGandhi
    புது டெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    புதுடெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



    ராஜ்காட்டில் காந்தியின் விருப்பமான பஜனை பாடலான ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் காந்தியின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். பல்வேறு மத்திய அமைச்சர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
     
    மகாத்மா காந்தியை நினைவு கூரும் விதமாக, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ‘மகாத்மா காந்தி காட்டிய பாதையை பின்பற்றவும், என்றென்றும் அவர் மதிப்புகளை எடுத்துரைக்கவும் வலியுறுத்தி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

    மேலும் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைவருக்கும் நன்றி எனவும், அவர்களின் சேவை மற்றும் தியாகத்தை நாட்டு மக்கள் அனைவரும் நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறார்கள் எனவும் மோடி தெரிவித்துள்ளார். #MartyrsDay #MahatmaGandhi
     
    ×