search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maldives former president"

    பண மோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் யாமீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #Maldivesformerpresident #Yameen #AbdullaYameenarrest
    மாலே:

    மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் . இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

    தேர்தலின்போது சட்ட விரோதமாக ரூ.10 கோடி பணம் பெற்றதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பான வழக்கு விசாரணை கிரிமினல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் அப்துல்லா யாமீன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் தலைநகர் மாலேவில் அருகே யுள்ள தூனிட்கோ தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

    குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாமீனுக்கு 15 வருட ஜெயில் தண்டனையும், மோசடி செய்த பணத்தை விட 3 மடங்கு அபராத தொகையும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    மாலத்தீவில் உள்ள யாமீனின் வங்கி கணக்குகளையும் ரூ.45 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் கோர்ட்டு முடக்கி வைத்துள்ளது. #Maldivesformerpresident #Yameen #AbdullaYameenarrest  

    மாலத்தீவு தேர்தல் வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் அதிபர் மனு செய்துள்ளதை அடுத்து அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #AbdullaYameen
    மாலே:

    மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.

    அதை யாமீன் ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடத்தி வெற்றி பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மாலத்தீவு தேர்தல் கமி‌ஷன் மறுத்துள்ளது.

    தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றது. அதனால் 89.2 சதவீதம் ஓட்டுகள் பதிவானது என தெரிவித்துள்ளது. தேர்தலில் தோல்வி அடைந்ததன் மூலம் யாமீன் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும். புதிய அதிபர் இப்ராகிம் முகமது சாலிக் வருகிற நவம்பர் 17-ந்தேதி பதவி ஏற்க வழிவிட வேண்டும்.

    அதற்கு மாறாக தேர்தல் வெற்றியை எதிர்த்து மாலத்தீவு சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.



    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலே நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #AbdullaYameen
    ×