search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mamata anti bjp rally"

    பிரித்தாளும் மோடி அரசை நீக்குவதற்காக பலதரப்பட்ட தலைவர்கள் ஒன்றுபட்டுள்ள நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.#Mamata #AntiBJPRally #SoniaGandhi
    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில், பாரதிய ஜனதாவுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் திரண்டனர். 

    மாநாட்டில் பேசிய தலைவர்கள், மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கினார்கள்.

    மோடி ஆட்சியில், மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டில் ஒற்றுமை சீர்குலைந்து விட்டது. நாடு முன்னேற்றம் காணவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. வேலை வாய்ப்பை பெருக்கவில்லை. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த அரசை மக்கள் வீழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.



    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பது பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பிரித்தாளும் மோடி அரசை நீக்குவதற்காக பலதரப்பட்ட தலைவர்களின் ஒன்றுபட்ட முயற்சியாகும். வரும் பாராளுமன்றத் தேர்தலில்  ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும். 

    நாட்டில் உள்ள விவசாயிகள் மீதும் எல்லையில் உள்ள வீரர்கள் மீதும் ஒருவித நெருக்கடி நிலவுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மீனவர்கள் பேரிழப்பை சந்தித்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். #Mamata #AntiBJPRally #SoniaGandhi
    ×