search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandya Parliamentary Constituency"

    மண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எனது பேரனை நிறுத்த மாட்டோம். உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரான தேவேகவுடா கூறினார். #DeveGowda #MandyaConstituency
    பெங்களூரு:

    சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எனது பேரனை நிறுத்த மாட்டோம். உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்தே இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறது.

    காங்கிரசுடன் ஆலோசித்து பல்லாரி தொகுதிக்கு வேட்பாளரை இறுதி செய்வோம். சிவமொக்காவில் மது பங்காரப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவர் ஏற்க மறுத்தால், வேறு வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்துவோம்.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #MandyaConstituency

    ×