search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manganese Festival"

    • கார்பைட் கற்கள் கொண்டு பழுக்கக்க வைத்து விற்பனைச் செய்வது வழக்கம்.
    • வியாபாரி களுக்கும் விரைவாக உணவு உரிமம் எடுக்க சொல்லி அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் ஆண்டுதோறும் வரலாற்று புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவிற்கு சில மாதங்களுக்கு முன்னும், பின்னும் அதிக அளவு மாங்கனிகள் வெளிமாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாவது வழக்கம். ஒரு சிலர், வெளிமாவட்டங்க ளிலிருந்துவரும் மாங்கனிக ளை, தங்கள் குடோனில் சேமித்து வைத்து, விழா நேரத்தில், கார்பைட் கற்கள் கொண்டு பழுக்கக்க வைத்து விற்பனைச் செய்வது வழக்கம். மேலும், ஏராளமான வியாபாரிகள், மாங்கனிகள், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை, கார்பைட் கற்கள் மற்றும் ரசாயன தண்ணீர் கொண்டு பழங்களை பழுக்க வைப்ப தாக, புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் அனுப்பிவந்தனர்.

    அதன்பேரில், புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், அதிரடி சோதனை நடத்தினார். தொடர்ந்து, நேற்று காரை க்கால் நகர் பகுதியில் உள்ள மாங்கனி, வாழைப்பழம் கடைகள், குடோன்கள், நேரு மார்க்கெட், தள்ளு வண்டிகளிலும் அதிரடி சோதனை நடத்தினார். சோதனையில், ரசாயன தண்ணீர் மற்றும் கார்பைட் கற்களால் பழுக்கவை க்கப்பட்ட மாங்கனிகள், வாைழப்பழங்கள், பச்சை நிறமேற்றிய பச்சை பட்டாணிகளை சோதனைக்காக புதுச்சேரி கொண்டுசென்றார். கார்பைடு மூலம் பழுக்கவை க்கப்பட்ட மாங்கனிகளை உடனடியாக பறிமுதல் செய்து அழித்தார். மேலும் நேரு மார்க்கெட்டில் உள்ள அனைத்து வியாபாரி களுக்கும் விரைவாக உணவு உரிமம் எடுக்க சொல்லி அறிவுறுத்தினார். வியாபாரிகள் அனை வரும் மாங்கனிகள், வாழைப்பழங்களை ரசாயனம் கொண்டு பழு க்கவைப்பதை உடனே நிறுத்திகொள்ளவேண்டும். மீறினால், கடும் நடவடிக்கை எடுப்பதோடு , கடை நடத்தும் உரிமம் பறிக்கப்படும். மேலும், இனி வாரம் மற்றும் மாதந்தோறும் இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துசென்றார்.

    ×