என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mango crop
நீங்கள் தேடியது "mango crop"
காரிமங்கலம் பாலக்கோடு பகுதியில் பருவமழை குறைவால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாங்காய் மகசூல் குறைவால், விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரிமங்கலம்:
பாலக்கோடு, காரிமங்கலம், அனுமந்தபுரம், கும்பாரஹள்ளி, மாரண்டஅள்ளி, பெல்ரம் பட்டி, ஜக்கசமுத்திரம், குண்டாங்காடு போன்ற பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்கோவா, பெங்களுரா, செந்துரா, நீலம், பங்கன்பள்ளி, சக்கரைகுட்டி, பீத்தர் என 20-க்கும் மேற்பட்ட ரகங்களில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மாங்காய் உள்ளூர் தேவைபோக வெளிமாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மாம்பழம் சீசன் தொடங்கிய நிலையில் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மாசெடிகளை காப்பாற்ற ஒரு டிராக்டர் தண்ணீர் 900 ரூபாய் கொடுத்து வாங்கி ஊற்றியும் போதிய மகசூல் கிடைக்கவில்லை. மேலும் ஏக்கர் ஒன்றுக்கு கடந்த ஆண்டு 10 முதல் 15 டன் கிடைத்த மாங்காய் தற்போது 2 டன்னுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே, அரசு மாங்காய் விவசாயிகளுக்கு வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
×

X