search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Matter"

    • மேட்டார் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் 5 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது.
    • புதிய மேட்டார் ஏரா மாடலில் மூன்று ரைட் மோட்கள், 10.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் வாகனம்- ஏரா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மேட்டார் ஏரா மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் மேட்டார் ஏரா மாடல்: ஏரா 4000, ஏரா 5000, ஏரா 5000+ மற்றும் ஏரா 6000+ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    மேட்டார் EV மாடல் மொத்த டிசைன் இளைமிக்க தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் எல்இடி ஹெட்லைட், க்ளிப் ஆன் ஹேண்டில்பார்கள், ஸ்ப்லிட் சீட் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் ICE இருசக்கர வாகனம் போன்றே காட்சியளிக்கிறது.

     

    மேட்டார் ஏரா 5000 மாடலில் 10 கிலோவாட் மோட்டார் மற்றும் லிக்விட் கூல்டு 5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 125 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது இரண்டு மணி நேரத்தில் சார்ஜ் செய்திட முடியும். இதன் மோட்டார் செட்டப் உடன் 4-ஸ்பீடு மேனுவல் ஷிஃப்ட் லீவர் உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை மேட்டார் எலெக்ட்ரிக் பைக் ரேன்ஜ், ஸ்பீடு, ட்ரிப் மீட்டர், ஒடோமீட்டர், பேட்டரி லெவல், ரைடு மோட்கள், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி விவரங்களை வழங்கும் டிஎஃப்டி ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதன் கன்சோலில் நேவிகேஷன், கால்/மெசேஜ் அலர்ட்கள், ரைடிங் விவரங்கள் உள்ளன. இத்துடன் OTA, கீலெஸ் வசதி மற்றும் சிறிய ஸ்டோரேஜ் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹார்டுவேரை பொருத்தவரை இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங் ஹார்டுவேரை பொருத்தவரை ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் ABS/CBS வசதிகை கொண்டுள்ளது. இத்துடன் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேட்டார் ஏரா 5000 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 999 என்றும், ஏரா 5000+ விலை ரூ. 1 லட்சத்து 53 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இவை அறிமுக விலை என்பதால் விரைவில் மாற்றப்படலாம். புதிய மாடல்களுக்கு முன்பதிவு ஒரு மாதத்தில் துவங்குகிறது.

    • உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு வரலாறு காணாத வகையில் பலமடங்கு அதிகரித்து வருகிறது.
    • இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் கணிசமான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன.

    தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் மேட்டர், இந்தியாவில் முதல் முறையாக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பெயர் அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் விவரங்கள் மட்டும் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த மாடல் எப்போது வெளியாகும் என்ற விவரங்களும் மர்மமாகவே உள்ளது.

    மேட்டர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மோட்டார்சைக்கிள் நேக்கட் ஸ்டைல் மற்றும் ஷார்ப் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் ஆங்குலர் கேசிங்கில் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பாடி முழுக்க ரேஸ் நம்பர்கள் கிராஃபிக்ஸ்-ஆக வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் 7 இனஅச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, கனெக்டெட் ஸ்கிரீன் ரிமோட் லாட் / அன்-லாக், ஜியோஃபென்சிங், லைவ் லொகேஷன் டிராக்கிங், வெஹிகில் ஹெல்த் மாணிட்டரிங், சார்ஜிங் விவரங்கள், புஷ் நேவிகேஷன் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கீலெஸ் ஸ்டார்ட் வசதியை கொண்டிருக்கிறது. இதன் இருபுறமும் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய மேட்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 10.5 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது. இத்துடன் "ஹைப்பர்ஷிஃப்ட்" மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது மோட்டார்சைக்கிள் திறனை அதிகப்படுத்தி, வேறு எந்த மாடலும் வழங்காத ரேன்ஜ் வழங்கும் என மேட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் 5 கிலோவாட் ஹவர் மேட்டர் எனர்ஜி 1.0 பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதன் பவர்பேக் உடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ரோட்டார் மற்றும் ஸ்டேட்டர்-ஐ குளிர்ச்சியூட்டும். இதன் டிரைவ்டிரெயின் மேட்டர் நிறுவன ஆலையில் மிக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுடன் 1 கிலோவாட் இண்டெலிஜெண்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    இந்த சார்ஜர் மேட்டர்சார்ஜ் 1.0 என அழைக்கப்படுகிறது. இதை கொண்டு மோட்டார்சைக்கிளை எந்த விதமான 5A, 3-பின் பிளக் பாயிண்ட் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சார்ஜர் மோட்டார்சைக்கிளை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். இது ஒவர் சார்ஜ் ப்ரோடெக்‌ஷன் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை சப்போர்ட் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    ×