search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mcgrath"

    இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவல் டெஸ்டில் 2-விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் உள்ள மெக்ராத்தை சமன் செய்தார். #ENGvIND #JamesAnderson
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். ஓவல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் (தவான், புஜாரா) கைப்பற்றினார்.

    இதன்மூலம் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் உள்ள மெக்ராத்தை (ஆஸ்திரேலியா) சமன் செய்தார்.

    மெக்ராத் 124 டெஸ்டில் 563 விக்கெட் எடுத்துள்ளார். ஆண்டர்சன் 143 டெஸ்டில் 563 விக்கெட் கைப்பற்றியுள்ளார். முத்தையா முரளீதரன் (இலங்கை) 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், அனில் கும்ளே (இந்தியா) 619 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். #ENGvIND #JamesAnderson #Anderson #Mcgrath
    எனது சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்து விட்டால், அவரது சாதனையை எவராலும் தொட முடியாது என மெக்ராத் கூறியுள்ளார். #Anderson
    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் க்ளென் மெகராத். இவர் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 முறை ஐந்து விக்கெட், 3 முறை 10 விக்கெட்டுக்களுடன் 563 விக்கெட்டுக்கள் குவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியதில் மெக்ராத் முதல் இடத்தில் உள்ளார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார்.

    அப்போது தனது விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் 36 வயதாகும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத் சாதனையை உடைக்க இருக்கிறார்.

    இவர் 141 போட்டிகளில் 26 ஐந்து விக்கெட், 3 பத்து விக்கெட்டுக்களுடன் 557 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இன்னும் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் மெக்ராத் சாதனையை முறியடிப்பார். இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கிறது. அப்போது இந்த சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது.



    இந்நிலையில் ஒருமுறை எனது சாதனையை ஆண்டர்சன் முறியடித்து விட்டால், அவரை எவராலும் தொட இயலாது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘நான் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது அதிக அளவில் மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு வாழ்த்துக்கள். ஒருமுறை என்னுடைய சாதனையை அவர் முறியடித்து விட்டார், அதன்பின் அவரை எவராலும் தொட இயலாது.



    சாதனை என்பது அருமையானது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்ததற்காக பெருமைப்படுகிறேன்.

    எனது சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடிக்கும்போது அவருக்கு சமமான சந்தோசம் அடைவேன். ஏனென்றால், எந்தவொரு நாட்டில் இருந்து விளையாடினாலும், வேகப்பந்து வீச்சாளர் என்பது அவர்களை ஒருங்கிணைக்கும்’’ என்றார்.
    ×