search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Center"

    • அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
    • புதன்கிழமை தோறும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மூன்றாம் பாலினத்தவருக்கான வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்று திருநங்கைகளுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் தொடங்கப்பட்டது. இதனை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    இந்த பன்னோக்கு மருத்துவமையத்தில் புதன்கிழமை தோறும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மூன்றாம் பாலினத்தவருக்கான வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு என தனி சிறப்பு டாக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிகிச்சை மையத்தில் தோல்நோய், பிளாஸ்டிக் சர்ஜரி, சிறுநீரக அறுவை சிகிச்சை, மனநோய், மகப்பேறு மற்றும் காது, மூக்கு, தொண்டை டாக்டர்கள் கொண்ட சிறப்பு குழுவினர் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க உள்ளனர்.

    இதுவரை மூன்றாம் பாலினத்தவர்கள் வெவ்வேறு சிகிச்சைப் பிரிவிற்கு சென்று ஆலோசனை பெற வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு பன்நோக்கு சிகிச்சை மையம் அவர்களின் மருத்துவ தேவையை ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    இது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். இந்த சிகிச்சை தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழும் மற்றும் இந்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழும் செயல்பட உள்ளது.

    ×