என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Medical Commission"
- எந்தெந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் காலியாக இருக்கின்றன என்ற விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது.
- நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் இடங்கள் நிரம்பவில்லை என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடந்து முடிந்து உள்ளது. இது தவிர நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் தமிழக மருத்துவ கல்வி ஆணையம் கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் பெரும்பாலானவை நிரம்பிவிட்டன. 2-வது கட்ட கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு நேற்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.
எந்தெந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் காலியாக இருக்கின்றன என்ற விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 10 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 450க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.
நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் மருத்துவ இடங்களை இந்திய மருத்துவ கல்வி ஆணையம் நிரப்பி வருகிறது. 3 கட்டமாக நடந்து முடிந்துள்ள கலந்தாய்வுக்கு பிறகு இடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள 51 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மொத்த மருத்துவ இடங்களை நிரப்ப நடத்தப்பட்ட கலந்தாய்வில் இதுவரை 7922 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன.
சென்னையில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மருத்துவ கல்லூரியில் மட்டும் 80 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அதாவது 198 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. பாரத் மருத்துவ கல்லூரியில் 58 இடங்களும், பாலாஜி மருத்துவ கல்லூரியில் 47 இடங்களும், ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரியில் 51 இடங்களும் காலியாக உள்ளன.
புதுச்சேரியியில் உள்ள லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரியில் 45 இடங்கள், அறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் 36, மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 8, சேலம் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியில் 13, காரைக்கால் வினாயகா மிஷன் கல்லூரியில் 25 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் இடங்கள் நிரம்பவில்லை என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ கல்வி ஆணைய அதிகாரிகள் கூறும்போது ஒதுக்கப்பட்ட இடங்களில் மாணவ-மாணவிகள் சேராமல் இருந்தால் அந்த இடங்கள் காலியானதாக கருதப்படும். அடுத்து வரும் இறுதிகட்ட கலந்தாய்வில் மொத்தமுள்ள காலி இடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்