search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical First aid treatment"

    • மருத்துவ சங்கப் பொருளாளர் டாக்டர். சுந்தரமூர்த்தி, மருத்துவ சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • டாக்டர்.பாலமுரளி,டாக்டர்.பிரபலதா மற்றும் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    இந்திய மருத்துவ சங்கம், திருப்பூர் டெக்ஸ் சிட்டி கிளை, திருப்பூர் மாவட்ட காவல்துறை இணைந்து நடத்திய போலீசாருக்கான மருத்துவ முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் பல்லடம் வனாலயத்தில் நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் டெக்ஸ் சிட்டி கிளை தலைவர் டாக்டர் ஏஜாஸ் அன்சாரி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா,மருத்துவ சங்கப் பொருளாளர் டாக்டர். சுந்தரமூர்த்தி, மருத்துவ சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் இந்த பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசுகையில்:- எங்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும் முதலில் அழைப்பது போலீசாரைத்தான். எனவே போலீசார் முறையான முதலுதவி சிகிச்சையை தெரிந்து வைத்துக் கொண்டால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். அதற்காகத்தான் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. விபத்து ஏற்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் முறை, அவர்களுக்கு அளிக்க வேண்டிய உடனடி முதலுதவி சிகிச்சை ஆகியவற்றை, இது குறித்து பயிற்சி பெற்ற போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தால், பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்பு எளிதில் குணம் அடைய வாய்ப்புகள் அதிகம்.

    எனவே போலீசார் முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சியை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த பயிற்சி முகாமில் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கத்தை செய்து கான்பித்தனர். விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு, மரண தருவாயில் உள்ளவரை காப்பாற்றுவது, பெரிய விபத்துக்களில் இருந்து மீட்பது, தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது,பின்னர் சிகிச்சை முறை அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் முதலுதவி சிகிச்சை பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்களை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், டாக்டர்.பாலமுரளி,டாக்டர்.பிரபலதா மற்றும் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    ×