search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meeting டெல்லி"

    சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில் முதல்வர்கள் யார்? என்பது தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். #RahulGandhi #MPCM #RajasthanCM #ChhattisgarhCM #2018electionresults
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 117 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
     
    இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 198 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்று, 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்று, 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது.



    இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மேற்கண்ட 3 மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும்.

    இதேபோல், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை (புதன்கிழமை) அந்தந்த மாநில தலைநகரங்களில் நடைபெறவுள்ளது. #RahulGandhi #MPCM #RajasthanCM #ChhattisgarhCM #2018electionresults
    ×