என் மலர்
நீங்கள் தேடியது "Memorial Day"
- முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, மாவட்ட செயலாளர் மணி, துணைத்தலைவர் வண்ணை சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேல்கரை பகுதியில் வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
- பொதுமக்கள் வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேல்கரை பகுதியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 86-வது நினைவு நாள் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர் சதீஷ்குமார், காங்கிரஸ் கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் பொதுமக்கள் வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கால்பிரவு, பெரிய கோட்டை, திருப்பாசேத்தி பகுதியில் வ.உ.சி. நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது.
- அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
- அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் பங்கேற்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை போளூர், கீழ்பென்னாத்தூர் செங்கம் ஆகிய தொகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டன.
- ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அவினாசி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- அ.தி.மு.க.சார்பில், ஜெயலலிதா உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
அனுப்புர்பாளையம் :
அவினாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அவினாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றதுணைத்தலைவர் என்.சின்னக்கண்ணு, கிளாகுளம் ராமன், வடக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் பேபி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்தி, வடக்கு ஒன்றிய மீனவரணி செயலாளர் தினேஷ் குமார், ஒன்றிய இளைஞரணி பாசறை துணை செயலாளர் அய்யாச்சாமி, வார்டு உறுப்பினர்கள் குமரேசன், கார்த்தி, செல்வி, சித்ரா, லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் அவினாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சியிலுள்ள கிராமங்களிலும் அ.தி.மு.க.சார்பில், ஜெயலலிதா உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
- அ.தி.மு.க. சார்பில் பெரியகோட்டை ஊராட்சி காந்திநகர் 2 கிளையில் நடைபெற்றது.
- பெரியகோட்டை ஊராட்சி கிளை செயலாளர்கள் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மடத்துக்குளம் :
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சி குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பெரியகோட்டை ஊராட்சி காந்திநகர் 2 கிளையில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் யூனியன் கவுன்சிலர் செல்வராஜ், ஊராட்சி துணை தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஐ.டி., விங் தலைவர் சுப்பிரமணி, ஒன்றிய ஐடி.விங் செயலாளர் ஜாஹீர்உசேன்,
பெரியகோட்டை ஊராட்சி கிளை செயலாளர்கள் இளம்பிறை எம்.சாதிக், கே.எஸ்.கே.செந்தில், சிடிசி .ரத்தினசாமி, எஸ்.மணிகண்டன், பாபு, குணசேகரன், விஜயகுமார், பாக்கியலட்சுமி , ராமசாமி, பாரதி, மயிலாத்தாள், துரைசாமி, நாகராஜ், வேல்முருகன்,ஐடி.விங் சுரேஷ் மற்றும் ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.
- 1000பேர் கலந்து கொண்டு திருப்பூர் குமரன் சிலை அருகில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் :
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாநகர மாவட்டஅ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆணைப்படி திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் சண்முகம் , திருப்பூர் மாநகர மாவட்ட துணைச்செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் தலைமையில் 1000பேர் கலந்து கொண்டு திருப்பூர் குமரன் சிலை அருகில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆனந்த கிருஷ்ணன் , மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளா, மாவட்ட பொருளாளர்- மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, பொதுக்குழுஉறுப்பினர்கள் ஜீப்ரா ரவி,அரவிந்த், ஜெயந்தி,சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் சிதம்பரம் செல்வராஜ் ,கே.சி.மயில்சாமிமற்றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கயம், பல்லடம் ,அவிநாசி ஆகிய தொகுதியின் தொண்டர்கள் ,மகளிர் அணி பொறுப்பாளர்கள், ஒன்றியம், வட்ட, கிளைக்கழகம், பகுதி , நகர பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.
- ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- வழக்கறிஞர்கள் செல்ல பாண்டியன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-வது ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
நகரக் செயலாளர் டி. ஜி. சண்முகசுந்தர் தலைமையில், சிங்காரவேலு தெற்கு ஒன்றிய செயலாளர், ஆர். ஜி .எம். பாலகிருஷ்ணன் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னிலையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் நகர் மன்ற தலைவர், சுரேஷ் குமார் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், சுரேந்தர் மாவட்ட மாணவர் அணி செயலாளர், அன்பரசன் நகர அவைத் தலைவர், முருகதாஸ் மாவட்ட பிரதிநிதி, சிதம்பரம் நகர துணை செயலாளர், எம் முருகதாஸ் நகர பாசறை செயலாளர், டி பிரதீப் குமார் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், கே ஜகபர் நகர எம்ஜிஆர் மன்ற தலைவர், மரியதாஸ் நகர இளைஞரணி செயலாளர், தினேஷ்குமார் நகர மாணவர் அணி செயலாளர், வழக்கறிஞர்கள் செல்ல பாண்டியன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தஞ்சை மேலவீதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுபின்னர் முன்னாள்மேயர் சாவித்ரி கோபால், கவுன்சிலர் கோபால் ஆகியோர் ஏற்பாட்டின்படி பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் எம்.ஜி.ஆர் மன்ற இணை செய லாளர் ராஜமாணிக்கம், கூட்டுறவு அச்சகத் தலைவர் புண்ணி யமூர்த்தி, பகுதி செயலா ளர் சாமிநாதன், மாண வரணி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்புவனத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சோனைரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் மணலூர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், ஒன்றிய பேரவை செயலாளர் பாண்டி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மனோன்மணி மதிவாணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலசந்தர், கிளைச் செயலாளர்கள் மணலூர் பிரபு, ராஜ், பீசர் பட்டினம் ராமசந்திரன், கீழடி சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி ஒன்றியத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலா ளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, நகர் செயலாளர் நாகுர்மீரா ஒன்றிய மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஜெயல லிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மானாமதுரை ஒன்றி யத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் தலைமையிலும் காளையார்கோவில் ஒன்றியத்தில் பஸ்நிலையம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி, மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை இணைச்செ யலாளர் மோசஸ், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை ஓ.பி.எஸ். அணி
சிவகங்கை அ.தி. மு.க., (ஓ.பன்னீர் செல்வம் அணி) சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்., அசோகன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு ஊர்வலமாக வந்து மலர்
தூவி மரியாதை செலுத்தி னர். நகர் செயலாளர் கே.வி., சேகர், மாவட்ட துணை செயலாளர் என்.எம்., ஜெயச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் சுந்தரபாண்டியன், தொகுதி செயலாளர் நாக ராஜன், நகர் துணை செய லாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- அ.தி.மு.க நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 35- வது ஆண்டு நினைவு தினம் வருகிற 24-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 35- வது ஆண்டு நினைவு தினம் வருகிற 24-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகி கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல் நிர்வாகிகள், அவரவர்கள் பகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
- தூத்துக்குடி டூவிபுரத்தில் இருந்து மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். 35-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க நாளை காலை 9 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எனது தலைமையில் தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள மாவட்ட அலுவலகத்தின் முன்பு இருந்து மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்படுகிறது.
முக்கிய வீதி வழியாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகம் சென்று அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரபகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிர்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், நிர்வாகிகள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து இடங்களிலும் அவரவர் பகுதிகளில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்த கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
- 49-வது நினைவு நாள்
திருச்சி:திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் க.வைரமணி ஒருஅறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளான நாளை 24-ந் தேதி சனிக்கிழமை காலை 08.30 மணியளவில் மத்திய மாவட்ட திமுக சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் செயல்வீரர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு தந்தை பெரியாருக்கு நினைவஞ்சலி செலுத்திட வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.