என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "merina beach"
சென்னை:
மெரினா கடற்கரையில் துரித உணவக ஓட்டலில் பணிபுரிந்து வந்தவர் ராஜேஷ்குமார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் ராணிமேரி கல்லூரி அருகே தகராறில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பிடித்தனர்.
பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ராஜேஷ் குமார் மீது வழக்குகள் ஏதும் இல்லாததால் போலீசார் அவரை விடுவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மெரினா சர்வீஸ் சாலையில் ராஜேஷ் குமார் பிணமாக கிடந்தார். இதுபற்றி நடைபயிற்சி சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ராஜஷ்குமார் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் தாக்கியதில்தான் அவர் உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜேஷ்குமாரின் மரணம் குறித்து ஒடிசாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து உடலை பெற்றுச் சென்றனர்.
போலீஸ் தாக்கியதால் தான் ராஜேஷ்குமார் பலியானார் என்பதை உயர் அதிகாரிகள் மறுத்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ராஜேஷ் குமார் போதையில் தகராறு செய்ததை போலீசார் விசாரித்து அனுப்பி விட்டனர்.
இதில் தேவையில்லாமல் போலீசார் தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது என்றனர்.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து தரும்படி மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் மற்றும் மீனவர்கள் வியாபாரம் செய்வதற்கான மாற்று இடம் வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், தூய்மைப்படுத்தும் பணிகள் மட்டும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீனவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மெரினாவில் கடை நடத்துபவர்கள் சங்கம் சார்பாக முறையிடப்பட்டது. அதில், மெரினாவை ஒழுங்குமுறை படுத்துகிறோம், தூய்மை படுத்துகிறோம் என்றும் எங்களை அப்புறப்படுத்த முயற்சி செய்கின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. இதேபோன்று, மீனவர்கள் தரப்பில் தங்களை கட்டாயப்படுத்தி எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவித்தனர்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மெரினா கடற்கரையில் இருந்து கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் மற்றும் வணிகர்கள் முறைப்படி மனுதாக்கல் செய்தால், அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர். விசாரணையை வருகிற ஜனவரி 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #ChennaiHighCourt
மெரினா கடற்கரை நீச்சல் குளத்தின் பின்புறம் கடற்கரை மணலில் நிர்வாண நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது.
நேற்று காலையில் மெரினாவில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் இதனை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெண் புதைக்கப்பட்ட இடத்தில் நாங்கள் மண்ணை தோண்டிக் கொண்டிருந்த போதுதான் பெண்ணின் உடல் புதைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
அண்ணா சதுக்கம் போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மல்லாந்து படுத்த நிலையில் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் பெண்ணின் உடல் கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த பெண்ணை யாரோ கொன்று புதைத்திருப்பது தெரியவந்தது.
அப்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் மதுரையை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் கலைச்செல்வி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
40 வயதாகும் கலைச்செல்வி, மதுரையில் இருந்து சென்னை வந்து மெரினா பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. நிர்வாண நிலையில் கலைச்செல்வியின் உடல் மீட்கப்பட்டதால் அவர் செக்ஸ் தகராறில் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது இன்னும் தெரியாமலேயே உள்ளது.
இக்கொலை சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் வெற்றிச்செழியன் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மெரினா பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த ஒருவருக்கும் கலைச்செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைதொடர்ந்து மெரினாவில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். #MerinaBeach
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் தரக்கூடாது என்று அக்கறை காட்டிய தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த அக்கறையை காட்டவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஆனால் இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30-க்கு தொடங்க இருந்த நிலையில் அரைமணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால் சி.எஸ். வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.
கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிசாமி அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால் இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிசாமி வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். #Karunanidhi #Kanimozhi #EdappadiPalanisamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்