search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meteorological information"

    தமிழ்நாட்டில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Meteorological #Rain

    சென்னை:

    தமிழ்நாட்டில் நேற்று இரவு பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    சென்னையில் நேற்று இரவு சூறை காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வெப்ப சலனம் மற்றும் மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.

    அதிகப்பட்சமாக திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 17 செ.மீட்டரும், காஞ்சீபுரத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    24 மணி நேரத்தில் பொறுத்தவரை வடதமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 49 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 46 மில்லி மீட்டர் மழை பெய்யும்.தெற்கு மேற்கு மழை இயல்பு விட 6 சதவீதம் அதிக மழை பெய்தள்ளது. #Meteorological #Rain

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    தமிழகத்தில் தென்மேற்குபருவமழை தொடங்கி உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இப்போது அங்கும் கன மழை இல்லை. அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய உள்ளது.

    கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இரவிலும் அனல் தகிக்கிறது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது வலு இழந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பான வெயிலை விட 3 டிகிரி அதிகரிக்கும்.

    வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வெப்பம் அதிகரிக்க கடல் காற்று மிக தாமதமாக வீசுவதே காரணம். அதேபோலத்தான் அடுத்த 3 நாட்களுக்கு வீசும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று வெயில் கடுமையாக இருந்தது. அதன் காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் அதிக அளவில் கூடினார்கள்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    கலவை 2 செ.மீ., எண்ணூர், வால்பாறை, பரங்கிப்பேட்டை, சின்னக்கல்லாறு, நெய்வேலி தலா 1 செ.மீ. 
    ×