search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "methane dunes"

    புளுட்டோ கிரகத்தில் உள்ள மணல் குன்றுகளில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள் காணப்படுவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.#Pluto #methane #NASA
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் கிரகங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. புளுட்டோ கிரகத்தை ஆராய நியூ கொரைசான்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2015-ம் ஆண்டு அனுப்பி வைத்தது.

    புளுட்டோ கிரகம் பூமியில் இருந்து மிகவும் தூரத்தில் உள்ளது. மிக சிறிய அளவிலான இக்கிரகத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இக்கிரகத்தை நியு கொரைசான் விண்கலம் போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது.

    அங்கு 2 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு மணல் குன்றுகள் உள்ளன. டோக்கியோ நகரம் அளவிலான இவை காற்றினால் உருவாகியிருக்க கூடும் என கருதப்படுகிறது. மணல் குன்றுகள் கலிபோர் னியாவின் டெத் பள்ளத்தாக்கு, சீனாவின் தக்லா மகன் பாலைவனத்தில் இருப்பது போன்று உள்ளது.



    புளுட்டோ கிரகத்தில் உள்ள மணல் குன்றுகளில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள் காணப்படுகின்றன. அவை மணல் போன்று உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்கட்டுரை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. #Pluto #methane #NASA
    ×