search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "metron train stations"

    சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி ஆகியவற்றின் கட்டணங்கள் 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னையில் குறிப்பிட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள சுற்று வட்டார பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி சேவை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    பயணிகள் விரைவாக மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்பதற்காக இந்த சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி கட்டணத்தை குறைத்து மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஷேர் டாக்சி கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.10 ஆகவும் குறைக்கப்படுகிறது. இந்த புதிய கட்டணம் நாளை (12-ந்தேதி) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

    கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் 47,628 பேர் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சியை பயன்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் 21,590 பேர் ஷேர் ஆட்டோவையும், 6442 பேர் ஷேர் டாக்சியையும் பயன்படுத்தி உள்ளனர். கோயம்பேடு, ஆலந்தூர் ரெயில் நிலையங்களில் மட்டும் 7561 பேர் இந்த சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #MetroTrain
    ×