என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mi 2
நீங்கள் தேடியது "Mi ஏ2"
சியோமி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2,000 குறைத்திருக்கிறது. #MiA2
சியோமி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2000 குறைத்திருக்கிறது. அதன்படி Mi ஏ2 ஸ்மார்ட்போனின் துவக்க விலை தற்சமயம் ரூ.11,999 ஆகும். இதற்கான அறிவிப்பை சியோமி துணை தலைவர் மனு குமார் ஜெயின் வெளியிட்டார்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை Mi ஏ2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 20 எம்.பி. பிரைமரி கேமரா, 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 4 பிளஸ் வசதி கொண்டிருக்கிறது. சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் கிடைப்பதால் இந்த ஸ்மார்ட்போனிற்கு பியூர் ஆண்ட்ராய்டு அனுபவம் மற்றும் வேகமான அப்டேட்களை பெற முடியும்.
சியோமி Mi ஏ2 புதிய விலை
இந்தியாவில் தற்சமயம் விலை குறைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் ரூ.11,999 விலையில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை தற்சமயம் மாற்றப்படவில்லை. இதன் விலை ரூ.15,999 ஆகும்.
சியோமி Mi ஏ2 சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 4+
இந்தியாவில் சியோமி Mi ஏ2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் முதற்கட்டமாக ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் 6 ஜி.பி. ரேம் மாடல் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X