என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mi 4
நீங்கள் தேடியது "Mi பேண்ட் 4"
சியோமி நிறுவனத்தின் புதிய சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் சியோமி நிறுவனத்தின் Mi பேண்ட் வெற்றிகரமான சாதனமாக இருக்கிறது. அந்த வகையில் சியோமியின் புதிய Mi பேண்ட் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதில் புதிய Mi பேண்ட் கலர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய சாதனம் Mi பேண்ட் 4 என அழைக்கப்படலாம் என்றும் இதில் டிஜிட்டல் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி Mi பேண்ட் 4 சாதனத்தில் சியோ ஏ.ஐ. விர்ச்சுவல் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் தனது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. தாய்வான் நாட்டின் என்.சி.சி. தளத்தில் Mi பேண்ட் 4 சாதனத்தின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. கூகுள் அசிஸ்டண்ட் போன்று சியோ ஏ.ஐ. கொண்டு வானிலை, ஸ்மார்ட் சாதனங்களை இயக்குவது மற்றும் மொழி பெயர்ப்பு போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
புகைப்படம் நன்றி: SlashLeaks
இத்துடன் புதிய சாதனத்தில் பட்டன் நீக்கப்பட்டு Mi பேண்ட் 4 கேபாசிட்டிவ் கண்ட்ரோல் கொண்டிருக்கும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி சியோமி Mi பேண்ட் 4 மாடலில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, இதய துடிப்பு சென்சார், பி.பி.ஜி. மாணிட்டர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
என்.எஃப்.சி. மூலம் மொபைல் பேமண்ட் செய்யும் வசதி கொண்ட மாடலை சியோமி அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த சாதனம் சீனாவில் மட்டும் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது. புதிய Mi பேண்ட் 4 பற்றி இதுவரை அதிகளவு தகவல்கள் வெளியாகவில்லை.
புதிய Mi பேண்ட் 4 சியோமியின் ரஃபேல், டாவின்சி மற்றும் பைக்சிஸ் குறியீட்டு பெயர்களை கொண்டு உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் 2019 நான்காவது காலாண்டில் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தை வளர்ச்சி பெற்றிருப்பதாக ஐ.டி.சி. தெரிவித்தது.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. #MiMix4
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சியோமி தனது Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சியோமி தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான டீசரை தனது வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Mi மிக்ஸ் 4 என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் ஸ்மார்ட்போனின் மாடல் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.
முன்னதாக சியோமி Mi மிக்ஸ் ஸ்மார்ட்போன் 2016 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக கான்செப்ட் வடிவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனில் டிரை-பெசல் லெஸ் டிஸ்ப்ளே மற்றும் செராமிக் பேனல் வழங்கப்பட்டிருந்தது. பின் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் நவம்பர் 2017 இல் அறிமுகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் சில மாற்றங்களுடன் 2018 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், Mi மிக்ஸ் 3எஸ் மற்றும் Mi 4 பற்றி எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது.
முந்தைய வழக்கப்படி சியோமி தனது Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வெய்போவில் வெளியாகி இருக்கும் டீசரை பார்க்கும் போது புதிய சியோமி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தெரிகிறது.
புதிய Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அதிகளவு மாற்றங்களுடன் ஸ்கிரீன் அளவு முந்தைய Mi மிக்ஸ் 3 மாடலை விட பெரியதாக இருக்கும் என்றும் பின்புறம் பெரிஸ்கோப் லென்ஸ் உடன் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. #Xiaomi #smartphones
சியோமி நிறுவனத்தின் Mi 9 மற்றும் Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன்களில் அந்நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Mi 9 ஸ்மார்ட்போன் சியோமியின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும். இதைத் தொடர்ந்து Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது. அந்த வகையில் Mi 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்திலும், Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்திலும் அறிமுகமாகலாம்.
புதிய ஸ்மார்ட்போன்கள் குறித்து சீன வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய Mi 9 மூன்று பிரைமரி கேமரா கொண்ட சியோமியின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களில் மூன்று அல்லது நான்கு கேமரா செட்டப் வழங்க துவங்கிவிட்ட நிலையில், சியோமி இதுவரை டூயல் கேமராவை வழங்கி வருகிறது.
Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் மூன்று கேமராக்களில் ஒன்று, பெரிஸ்கோப் லென்ஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒப்போ இதேபோன்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒப்போ நிறுவனம் இதேபோன்ற தொழில்நுட்பத்தை தனது இரு ஸ்மார்ட்போன்களில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்களில் ஒப்போ அதிகபட்சம் 10X வரையிலான ஹைப்ரிட் சூம் வசதியை வழங்கலாம். அந்த வகையில் சியோமி ஸ்மார்ட்போனிலும் இதே போன்ற வசதியை எதிர்பார்க்கலாம். மற்ற அம்சங்களை பொருத்த வரை சியோமி Mi 9 மற்றும் Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படலாம் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் சமீபத்தில் Mi பிளே ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், ஆக்டா-கோர் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி இந்தியா நிறுவனத்தின் Mi எல்இடி டிவி மாடல்கள் ஆறு மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #XIAOMI
இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் Mi எல்இடி டிவி மாடல்கள் விற்பனை துவங்கிய ஆறு மாதங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனையாகி இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.
சியோமி Mi எல்இடி டிவி 4 55 இன்ச், Mi எல்இடி டிவி 4ஏ 32 இன்ச் மற்றும் Mi எல்இடி டிவி 4ஏ 43 இன்ச் மாடல்கள் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இவை Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் டிவி பிரான்டாக இருக்கும் சியோமி Mi டிவி மாடல்களில் புதிதாக டிஜிட்டல் தரவுகள் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கென சியோமி நிறுவனம் சமீபத்தில் வைரல் ஃபீவர் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. மேலும் Mi டிவி மாடல்களுக்கென இரோஸ் நௌ தளத்துடன் இணைந்திருக்கிறது. அதன்படி ரூ.49 விலையில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
புதிய மைல்கல் சாதனையை Mi ப்ரியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். வன்பொருள் வடிவமைப்பு, ஸ்மார்ட் பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் மென்பொருள் சார்ந்த கூட்டணிகளை முடிவு செய்ய சில ஆண்டுகள் திட்டமிட வேண்டியிருந்தது. இதன் மூலம் ப்ரியர்களுக்கு சிறப்பான ஸ்மார்ட் டிவி அனுபவத்தை வழங்க முடிகிறது. தற்சமயம் மிக குறுகிய காலக்கட்டத்தில் ஐந்து லட்சம் இந்தியர்கள் பயன்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது என சியோமி இந்தியா ஆன்லைன் விற்பனை பிரிவு தலைவர் ரகு ரெட்டி தெரிவித்தார்.
சியோமி நிறுவனத்தின் Mi டிவி4 மாடல் Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் Mi8 நிகழ்வில் 75-இன்ச் திரை கொண்ட Mi டிவி4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 11.4 மில்லிமீட்டர் மெல்லிய மெட்டல் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கிறது. சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகப்பெரிய எல்இடி டிவி மாடலாக புதிய Mi டிவி4 இருக்கிறது.
கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் 49-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் Mi டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. புதி்ய Mi டிவி4 சியோ ஏஐ குரல் அங்கீகார வசதி, ஆன்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி மற்றும் டிடிஎஸ் ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது.
ப்ளூடூத் மற்றும் இன்ஃப்ராரெட் மூலம் இயங்கும் Mi ரிமோட் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது. இது Miடிவி மட்டுமின்றி, வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் செட் டாப் பாக்ஸ் போன்ற சாதனங்களை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது.
சியோமி Mi டிவி 4 75-இன்ச் சிறப்பம்சங்கள்:
- 75-இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T966 கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
- மாலி-T830 MP2 GPU
- 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டிவி மற்றும் பேட்ச்வால்
- சியோ ஏஐ குரல் அங்கீகார வசதி
- வைபை, ப்ளூடூத், Mi போர்ட், 3 x HDMI 2.0, AV, 2 x யுஎஸ்பி, 1 x ஈத்தர்நெட்
- 2x 8W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ்-ஹெச்டி
சியோமி Mi டிவி4 75 இன்ச் ஹெச்டிஆர் டிவி விலை 8999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.94,790) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் புதிய Mi டிவி4 மாடல் ஜூன் 6-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் நான்கு புதிய Mi டிவி 4 மாடல்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து டிவி மாடல்களிலும் ஆன்ட்ராய்டு ஓஎஸ் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இது டீப் லேர்னிங் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.
4K டிவியுடன் Mi ரிமோட் கன்ட்ரோல் கொண்டுள்ளது. இன்ஃப்ராரெட் தொழில்நுட்பத்துடன் ப்ளூடூத் கொண்டுள்ளதால் வீட்டின் பல்வேறு சாதனங்கள், செட் டாப் பாக்ஸ் மற்றும் குரல் அங்கீகார வசதியை கொண்டுள்ளது.
சியோமி Mi டிவி 4எஸ் (55 இன்ச் கர்வ்டு) சிறப்பம்சங்கள்:
- 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K கர்வ்டு எல்இடி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 சிப்செட்
- மாலி-450 MP3 GPU
- 2 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
- வைபை 802.11 ac (2.4 / 5GHz), ப்ளூடூத் 4.2 LE, 3 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட்
- ஹெச்டிஆர் 10 மற்றும் HLG,H.264, H.265, Real, MPEG1/2/4, WMV3, VC-1
- 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- HD ஆடியோ டூயல் கோடிங்
சியோமி Mi டிவி 4X (55-இன்ச்) சிறப்பம்சங்கள்:
- 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K எல்இடி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 சிப்செட்
- மாலி-450 MP3 GPU
- 2 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
- வைபை 802.11 ac (2.4 / 5GHz), ப்ளூடூத் 4.2 LE, 3 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட்
- ஹெச்டிஆர் 10 மற்றும் HLG,H.264, H.265, Real, MPEG1/2/4, WMV3, VC-1
- 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- HD ஆடியோ டூயல் கோடிங்
சியோமி Mi டிவி 4S (43-இன்ச்) சிறப்பம்சங்கள்:
- 43-இன்ச் 3840x2160 பிக்சல் 4K எல்இடி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 சிப்செட்
- மாலி-450 MP3 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
- வைபை 802.11 ac (2.4 / 5GHz), ப்ளூடூத் 4.2 LE, 3 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட்
- ஹெச்டிஆர் 10 மற்றும் HLG,H.264, H.265, Real, MPEG1/2/4, WMV3, VC-1
- 2 x 6 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- HD ஆடியோ டூயல் கோடிங்
சியோமி Mi டிவி 4சி (32-இன்ச்) சிறப்பம்சங்கள்:
- 32 இன்ச் 1366x768 பிக்சல் ஹெச்டி எல்சிடி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மல்டிகோர் 64-பிட் பிராசஸர்
- மால்டிகோர் GPU
- 1 ஜிபி ரேம்
- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
- வைபை 802.11 ac (2.4 / 5GHz), 2 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட், S/PDIF போர்ட்
- 2 x 8 வாட் ஸ்பீக்கர், DTS- HD ஆடியோ
சியோமி Mi டிவி 4எஸ் (55-இன்ச்) கர்வ்டு, Mi டிவி 4X 55 இன்ச், Mi டிவி 4எஸ் 43 இன்ச் மற்றும் Mi டிவி 4சி 32 இன்ச் மாடல்களின் விலை முறையே 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,990), 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.29,690), 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,085) மற்றும் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் புதிய Mi டிவி விற்பனை மே 31-ம் தேதி முதல் துவங்குகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X