search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mi Mix 4"

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. #MiMix4



    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சியோமி தனது Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், சியோமி தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனிற்கான டீசரை தனது வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ளது. புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் Mi மிக்ஸ் 4 என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் ஸ்மார்ட்போனின் மாடல் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.

    முன்னதாக சியோமி Mi மிக்ஸ் ஸ்மார்ட்போன் 2016 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக கான்செப்ட் வடிவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனில் டிரை-பெசல் லெஸ் டிஸ்ப்ளே மற்றும் செராமிக் பேனல் வழங்கப்பட்டிருந்தது. பின் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் நவம்பர் 2017 இல் அறிமுகம் செய்யப்பட்டது. 



    இதைத் தொடர்ந்து Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் சில மாற்றங்களுடன் 2018 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், Mi மிக்ஸ் 3எஸ் மற்றும் Mi 4 பற்றி எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது.

    முந்தைய வழக்கப்படி சியோமி தனது Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வெய்போவில் வெளியாகி இருக்கும் டீசரை பார்க்கும் போது புதிய சியோமி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தெரிகிறது.

    புதிய Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அதிகளவு மாற்றங்களுடன் ஸ்கிரீன் அளவு முந்தைய Mi மிக்ஸ் 3 மாடலை விட பெரியதாக இருக்கும் என்றும் பின்புறம் பெரிஸ்கோப் லென்ஸ் உடன் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. #Xiaomi #smartphones



    சியோமி நிறுவனத்தின் Mi 9 மற்றும் Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன்களில் அந்நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    Mi 9 ஸ்மார்ட்போன் சியோமியின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும். இதைத் தொடர்ந்து Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது. அந்த வகையில் Mi 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்திலும், Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்திலும் அறிமுகமாகலாம்.

    புதிய ஸ்மார்ட்போன்கள் குறித்து சீன வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய Mi 9 மூன்று பிரைமரி கேமரா கொண்ட சியோமியின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களில் மூன்று அல்லது நான்கு கேமரா செட்டப் வழங்க துவங்கிவிட்ட நிலையில், சியோமி இதுவரை டூயல் கேமராவை வழங்கி வருகிறது.



    Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் மூன்று கேமராக்களில் ஒன்று, பெரிஸ்கோப் லென்ஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒப்போ இதேபோன்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒப்போ நிறுவனம் இதேபோன்ற தொழில்நுட்பத்தை தனது இரு ஸ்மார்ட்போன்களில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

    இந்த ஸ்மார்ட்போன்களில் ஒப்போ அதிகபட்சம் 10X வரையிலான ஹைப்ரிட் சூம் வசதியை வழங்கலாம். அந்த வகையில் சியோமி ஸ்மார்ட்போனிலும் இதே போன்ற வசதியை எதிர்பார்க்கலாம். மற்ற அம்சங்களை பொருத்த வரை சியோமி Mi 9 மற்றும் Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    சியோமி நிறுவனம் சமீபத்தில் Mi பிளே ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், ஆக்டா-கோர் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
    ×