search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Microwave steam cooking"

    மைக்ரோவேவ் ஓவன்கள் தற்போது ஸ்டீல் மூலம் உணவு தயாரிப்பு முறையை கையாளத் தொடங்கியுள்ளன. நீராவி மூலம் வேக வைத்த உணவு பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து, விட்டமின் மற்றும் மினரல்கள் எந்தவித இழப்புமின்றி நன்கு கிடைக்கின்றது.
    மைக்ரோவேவ் ஓவன்கள் தற்போது ஸ்டீல் மூலம் உணவு தயாரிப்பு முறையை கையாளத் தொடங்கியுள்ளன. நீராவி மூலம் வேக வைத்த உணவு பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து, விட்டமின் மற்றும் மினரல்கள் எந்தவித இழப்புமின்றி நன்கு கிடைக்கின்றது. கன்வென்ஷன் ஓவன் என்பது ஸ்டீம் ஓவன் இணைந்தவரே வருகின்றது. அதாவது அதில் கன்வென்ஷன் தனியாகவும், ஸ்டீம் பகுதியாகவும் பணி புரியும் அமைப்புடன் உள்ளது.

    ஸ்டீம் ஓவன் என்பதில் தனிப்பட்ட தண்ணீர் நிரப்பும் பகுதி உள்ளது. அதனை முன்பே நிரப்பிட வேண்டும். சிலர் அந்த தண்ணீர் பிரிவுக்கு தண்ணீர் செல்வதற்கு ஏற்ற தனிப்பட்ட பைப் அமைப்பை ஏற்படுத்தியும் விடுகின்றனர். இதன் மூலம் தண்ணீர் குறையும்போது அவ்வவ்போது தண்ணீர் நிரம்பிவிடும். ஸ்டீம் மூலம் இயக்கம் ஆரம்பித்தவுடன் தண்ணீர் ஆவியாகி அதிலிருந்து நிராவி ஓவன் உட்புறம் பகுதியில் பரவி உணை வேகவைக்கும்.

    இதில் சில சூடான தகடு மூலம் வெப்பம் பரவும் வகை 50 சதவீதமும், நீராவி மூலம் வெப்பம் பரவுதல் 50 சதவீதமும் உள்ள வகையில் செயல்பாடு உள்ளது. இதன் மூலம் உணவு மேற்புறம் நல்ல கிரிஸ்பியாகவும், உட்புறம் ஈரத்தன்மையுடன் இருக்கும். மேலும் 20 சதவீத அளவிற்கு விரைவாக உணவு தயார் செய்திடவும் ஸ்டீம் ஓவன் உதவி செய்கிறது. ஒரு சில மாடல்களில் உள்ள சென்சார் அமைப்பு எந்தவிதமான உணவிற்கு எவ்வளவு கன்வென்ஷன் பிரிவை உட்செலுத்துவது, எவ்வளவு நீராவி வெப்பத்தை உட்செலுத்துவது என்பதை கண்டறிந்து தேவையான அளவில் இரு வகை பிரிவுகளை சீரான உட்செலுத்தும் வகையில் சிறப்புடன் இயங்குகிறது.

    ஸ்டீம் ஓவனில் ஏற்படும் நன்மைகள்

    முன்பு கூறியபடி உணவின் தன்மை மாறாதப்படி ஸ்டீம் ஓவன் செயல்பாடு உள்ளது. ஆயினும், தனிப்பட்ட ஸ்டீம் ஓவன் என்பது 100 டிகிரி வெப்பத்தில் மட்டுமே இயங்கக்கூடியது. ஆகவே இரு பிரிவு கொண்ட ஓவன் எனில் கூடுதலாக பேக்கிங் மற்றும் ரோஸ்டிங் உணவுகளை தயார் செய்திடவும் ஏதுவாக இருக்கும். அதுமட்டுமின்றி நமக்கு தேவயைான உணவிற்கு ஏற்ப ஸ்டீம் வசதியும், கன்வென்ஷன் வசதியும் மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம். சில சமயம் இரண்டும் கலந்த வகையிலும் உள்ளவாறு இயக்கிட வசதி உண்டு. ஸ்டீம் பிரிவின் மூலம் தானியங்கள், அரிசி, பிரட் மற்றும் கஸ்ட்ரட் போன்ற உணவுகளை வேக வைத்து கொள்ள முடியும்.



    சைக்லோனிக் தொழில்நுட்ப டிரை ஸ்டீம்

    ஸ்டீம் ஓவன்கள் என்பதில் நீராவி மூலம் சமையல் செய்யப்படும்போது உட்புறம் தண்ணீர் வடிவது மற்றும் கீழ்புறத் தட்டுகளில் தண்ணீர் கொட்டுவது போன்ற பிரச்சினை ஏற்படாது இருக்க வேண்டி புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சைக்லோனிக் தொழில்நுட்பத்தின் மூலம் பனிமூட்டம் போன்ற டிரை ஸ்டீம் ஒரே சீராக ஓவன் உட்பகுதி முழுவதும் பரவ விடப்பட்டு உணவு வேகவைக்கப்படுகிறது. இதன் மூலம் நீராவியில் உள்ள நீர் கீழ்படியாது உடனடியாக மறைந்து விடுகிறது. ஸ்டீம் குக்கிங் செயல்பாடு மூலம் உட்புற பகுதி எந்தவித தண்ணீர் வடியாதவாறும், திரவ திட்டுக்கள் ஏதும் காணப்படாதவாறும் நவீன தொழில்நுட்ப வசதி மூலம் சீரிய முறையில் செயல்பட வைக்கப்படுகிறது.

    சீரான அளவில் மல்டி ஸ்டீம் வெளிப்பாடு

    மல்டி ஸ்டீம் என்ற அமைப்பில் ஒரே சீரான அமைப்புடன் 360 டிகிரி அளவில் வெளிப்படுத்துகின்றது. இதன் மூலம் மிக வேகமான உணவு வேக வைத்தல் நிகழ்கிறது. சிறப்பு மிகு 3டி டிசைன் அமைப்பு பின்புற சுவர் என்பது சீரான ஆவியை வெளிப்படுத்தும் வகையிலான துளைகள் கொண்டவாறு உள்ளன.

    தண்ணீர் டேங்க் அமைப்பு

    புதிய டேங்க் அமைப்பு என்பது ஒருங்கிணைந்த கண்ட்ரோல் பேனல் வகையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய ஸ்டீம் ஓவனுக்கு ஏற்றவாறு நீராவி பாய்ச்சலை தரும்போது தண்ணீர் சிந்தாமல் இருக்க வேண்டீ உட்பொருத்தப்பட்ட அலை அமைப்பு சிறப்புடன் செயல்படுகிறது. அதுபோல் நீராவி செயல்பாடு முடிந்தவுடன் டேங்க் என்பதை கழற்றி மாட்டி விடும் அமைப்பாக உள்ளது. அதுபோல் இந்த தண்ணீர் டேங்க் என்பது டிஷ்-வாஷர் சேப்-ஆக உள்ளதால் சுலபமாக டிஸ்வாஷரில் சுத்தம் செய்து கொள்ளலாம்.

    தானியங்கி வெண் படிமம் நீக்கும் அமைப்பு

    நீராவி மூலமாக உட்பகுதி செயல்படும்போது அதன் உட்பகுதி வெண் படிமம் படிந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் ஓவனின் உட்பகுதியை அசுத்தம் செய்ய ஆட்டோ டீகால் அமைப்பை இயக்கிட அது வெண் படிமம் ஏதும் ஏற்படாத வகையில் சுத்தம் செய்யும் பணியை தொடங்கிவிடும். ஸ்டீம் ஓவன் அமைப்பு மூலம் உணவுகள் நல்ல சுவையுடன், ஆரோக்கிய சத்துக்கள் இழப்பின்றி கிடைக்க வழிவகைச் செய்யப்படுகிறது. 
    ×