என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Militants shot dead"
புல்வாம:
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் 3 முக்கிய முகாம்களை அழித்தது. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம் ஏற்பட்டது.
பாகிஸ்தானிடம் இந்திய வீரர் அபிநந்தன் சிக்க நேரிட்டதால் போர் ஏற்படாமல் சுமூக நிலை உருவானது. இதற்கிடையே புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தினார்கள்.
கடந்த 3 வாரங்களில் நடந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியைச் சேர்ந்த அகமது கான் (வயது23) என்று தெரிய வந்தது.
அகமதுகான் கடந்த 2017-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளான். எலக்ட்ரிசியனான இவனுக்கும் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஆதில் அகமதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருவரும் நண்பர்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் அவர்கள் இருவரும் ஏதோ சதி வேலைகளில் ஈடுபட போகிறார்கள் என்பதை தேசிய புலனாய்வு குழு கண்டறிந்து இருந்தது. பிப்ரவரி 27-ந்தேதி அகமது கான் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
அன்று முதல் அகமதுகான் தலைமறைவாகி விட்டான். அவனை தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு இவன்தான் மூளையாக செயல்பட்டவன் என்பதால் அவனை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
நேற்று புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிரால் பகுதியில் உள்ள பிங்கிலீஸ் என்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.
இதனால் பயங்கரவாதிகள் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்தது.
இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த 3 பயங்கரவாதிகளும் யார் என்பது முதலில் தெரியாமல் இருந்தது. இதுகுறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவன் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கான் என்று தெரிய வந்துள்ளது. இவனுக்கு முகமதுபாய் என்ற பெயரும் உண்டு.
கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளின் உடல்களும் துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய பயங்கரவாதியான அகமதுகானை புல்வாமா மாவட்டத்தில் நிறைய பேருக்கு தெரியாது. எனவே செத்தது அவன்தானா? என்பது பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #PulwamaAttack
சற்றும் எதிர்பாராத வகையில் காரில் இருந்தவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டவாறு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் காரினுள் இருந்த இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். #MilitantsKilled
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பதேவ்காடல் பகுதியில் நேற்று முன்தினம் லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.இந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும் பலியானார்.
இந்தநிலையில் இன்று எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் மாநிலம் பார முல்லா மாவட்டம் உரி செக்டார் எல்லையில் போனியர் என்ற பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக 3 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டவாறே உள்ளே நுழைய முயன்றனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களது ஊடுருவலை முறியடித்தனர். 3 பயங்கரவாதிகளையும் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாக தெரிய வில்லை. #JKInfiltration #Militantskilled
பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள டாங்தார் எல்லைகோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள வனப்பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.
அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்த நிலையில், இன்று மேலும் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நேற்று முதல் இன்று வரை நீடித்த இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். சண்டை முடிந்ததும் அங்கு தேடுதல் வேட்டை தொடர்கிறது. #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு ராணுவம் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். எனினும், பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. பக்ரீத் திருநாளான இன்றும் பயங்கரவாதிகள் கைவரிசை காட்டி உள்ளனர்.
இதேபோல் ஸ்ரீநகரில் ஒரு கும்பல் திடீரென பாகிஸ்தான் தேசிய கொடிகளையும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் கொடிகளையும் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து முழக்கங்கள் எழுப்பினர். முகத்தை மறைத்துக்கொண்டு வந்த அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. #JKMilitantsAttack #JKPoliceShotDead
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்