search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milk distilling protest"

    • கோஷங்கள் எழுப்பி போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
    • பசுமாட்டுப்பால் ரூ.30-க்கும், எருமைப்பால் ரூ.45க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை உயர்த்த பெரிதும் உதவியாக இருப்பது கால்நடை வளர்ப்பு, அவ்வகையில் விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை மட்டுமே. எனவே,விவசாயிகளின் நலன் கருதி அரசு பசுமாட்டுப்பால் லிட்டர் ரூ 60க்கும் எருமைப்பால் ரூ 75க்கும் கொள்முதல் செய்ய கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் வீரபாண்டி யில் உள்ள ஆவின் நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் பால் காய்ச்சும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு நடுரோட்டில் பால் காய்ச்சி தங்களது கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்ட த்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆர்ப்பாட்ட த்தின்போது கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது :- தமிழ்நாட்டில் விவசாயம் போதுமான அளவில் வருமானத்தை தராததால் விவசாயிகள் கால்நடைக ளை வளர்த்து அதன் மூலம் வருமானம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கால்நடை தீவனங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளன. இதற்கிடை யே தற்போது ஆவின் கூட்டுறவு சங்கத்தில் பசுமாட்டுப்பால் ரூ.30-க்கும், எருமைப்பால் ரூ.45க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் வாங்கும் பாலுக்கு விலையை உயர்த்திய ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. தனியார் பால் உற்பத்தியாளர்களுடன் ஆவின் நிர்வாகம் கூட்டு சேர்ந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. ஆவின் நிர்வாகம் தனியார் மயமாக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. எனவே ஆவின் பால் கொள்முதல் விலையை, பசு மாட்டு பால் லிட்டர் ரூ.60க்கும், எருமைப்பால், ரூ.75க்கும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

    ×