search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "milk vendor attack"

    பாகூர் அருகே காரில் வேகமாக சென்ற தகராறில் பால் வியாபாரி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பாகூர்:

    பாகூர் அருகே குருவிநத்தம் மேற்கு வீதியை சேர்ந்தவர் மணி (வயது50). பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை பால் வியாபாரம் செய்து விட்டு மணி தூக்கு பாலம் வழியாக குருவிநத்ததுக்கு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக அதிகவேகமாக சென்ற கார் மணியின் மீது மோதும் வகையில் சென்றது.

    உடனே, மணி அந்த காரில் சென்றவர்களிடம், ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என கேட்டார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த குருவிநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்த நடராஜ் (24), அவரது நண்பர் ரஞ்சித்(23) ஆகிய இருவரும், மணியை ஆபாசமாக திட்டி, உருட்டு கட்டையால் கொலைவெறிதாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் வீச்சரிவாளால் வெட்ட முயன்றனர்.

    தகவலறிந்த பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசாரை கண்டதும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், நடராஜை வீச்சரிவாளுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த மணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மணியின் சகோதரர் ராஜூ கொடுத்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து நடராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×