search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mini Marathon"

    • மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
    • முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமான மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி திருச்செந்தூரில் சட்டமன்ற அலுவலகம் முன்பு நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஆண்களுக்கான போட்டி திருச்செந்தூர் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம் வழியாக சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவிலும், பெண்களுக்கு திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரையிலான சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி. கொடி அசைத்து மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன்-சூர்யா தம்பதியினர் வெற்றி பெற்றனர்.

    இதனையடுத்து வெற்றி பெற்ற தம்பதியினருக்கு முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    2-வது பரிசாக 75 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 50 ஆயிரம் உட்பட 10 பரிசுகள் தலா இருபாலர்களுக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், நகர செயலாளர் சுடலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரி வந்தார்.
    • தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார்.

    கன்னியாகுமரி:

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு அங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருந்து காணிமடம் வரை உள்ள 21.4 கிலோ மீட்டர் தூரம் நடந்த தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். அவருடன் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு ஓடினார்.

    கன்னியாகுமரியில் நடந்த இந்த மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் 148-வது முறையாக ஓடி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி சில்வர் பீச் வரை சென்று முடிவடைந்தது.‌

    கடலூர்:

    கடலூர் 30 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் சில்வர் பீச்சில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் புத்தக திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அக்டோபர் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நெய்தல் புத்தக திருவிழா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை கடலூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு சிவா வரவேற்றார். மினி மாரத்தான் போட்டி கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி சில்வர் பீச் வரை சென்று முடிவடைந்தது. இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷினி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது.

    பெருந்துறை, 

    உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பெருந்துறையில் இன்று காலை நடைபெற்றது.

    இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்பு ணர்வு மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    மராத்தான் ஓட்டம் ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தொடங்கி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற பொதுமக்கள் சுற்றுச்சூழல் குறித்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • மினி மராத்தான் போட்டி நடந்தது.
    • வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாம்பட்டி கிராமத்தில் பிரியாவிடை நயனார், பொன்னாவிடை செல்வி தீர்த்தவாரி மண்டகப்படி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு மாம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    இந்த மினி மராத்தான் ஓட்டப்பந்தயம் மாம்பட்டி யில் தொடங்கி ஏரியூர் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று வர எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியினை எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காளீஸ்வரி பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட னர்.

    ராஜபாளையத்தை சேர்ந்த மாரி பிரசாத் முதல் பரிசையும், ரெங்கராஜ் 2-வது பரிசையும், 3-வது பரிசை பெங்களூரு சுரேசும் பெற்றனர். மினி மராத்தான் போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங் களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை, வெற்றி கோப்பை, பாராட்டு சான்றி தழ், பதக்கங்கள் வழங்கி கவுரவப்படுத்தினர். அடுத்து வந்த 10 பேருக்கு ஊக்கத் தொகையாக பரிசு தொகை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்ற 70 வயது முதியவர் கலந்து கொண்டு எல்கையை அடைந்தார். அதோடு பெரம்பலூரை சேர்ந்த ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வன் மற்றும் தனது மகள் ஓடியபோது உற்சாகப்படுத்திய தாய் என பலருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

    முன்னதாக கிராமத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டி களில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • கயத்தாறு அருகே உள்ள புளியம்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • அதனை மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள புளியம்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. அதனை மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புளியம்பட்டி சோதனை சாவடியில் இருந்து அக்கநாயக்கன்பட்டி வரை நடைபெற்ற போட்டியில் 12 வயது முதல் 14 வயது வரை, 15 வயது முதல் 18 வயது வரை அதற்கு மேல் மற்றும் காவலர்கள் ஆண், பெண் இருபாலர்களும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், சுதேசன், மாரியம்மாள், கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் பசுவந்தனை, கடம்பூர், மணியாச்சி, புளியம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ள அனைத்து போலீசாரும் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் டி.எஸ்.பி. லோகேஸ்வரன் பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.

    • போட்டியை நாலாட்டின்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜெஸ்டின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இதில் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கே.ராமசாமியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை 17 வயதிற்குட்பட்ட ஆண்க ளுக்கான மினி மாரத்தான் போட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே உள்ள காந்தி மைதானத்தில் தொடங்கியது.

    மாதங்கோவில், பழைய பஸ் நிலையம் வழியாக நடைபெற்ற மாரத்தான் போட்டியானது கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள கே.ஆர்.மணிமண்டபத்தில் நிறைவு பெற்றது. போட்டியை நாலாட்டின்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜெஸ்டின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டி யில் வெற்றி பெற்ற காட்டுநாயக்கன்பட்டி நட்ராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவன் மனோஜ்குமாருக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், கேடயம் வழங்கப்பட்டது. அதே பள்ளியை சேர்ந்த மாணவன் கருத்தப்பா ண்டிக்கு 2-வது பரிசாக ரூ.2 ஆயி ரம்,கேடயமும், 3-வது இடம் பிடித்த மாரிசெல்வத்திற்கு ரூ. 1,000, கேடயம் வழங்கப் பட்டது. ஆறுதல் பரிசாக 25 மாணவர்களுக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர், துணைத் தலைவர், தாளாளர், கல்லூரி இயக்குனர், முதல்வர்கள் ஆகியோர் களின் வழிகாட்டுதலின்படி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • காவல்துறை துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் மினிமாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே கடம்பூர் காவல் நிலையத்தின் சார்பில் இன்று காலை 7 மணி அளவில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மாற்றத்தை தேடி என்ற தலைப்பில் மணியாச்சி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் 5 கிலோ மீட்டர் தொலைவில் மினிமாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் கடம்பூர் மற்றும் சிதம்பராபுரம் சாலை புதூர், கோடாங்கால் ஆகிய கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பள்ளி மாணவ-மாணவிகள், காவல்துறையை சேர்ந்த ஆண், பெண் ஆகியோர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 8 வயது, 12,16,25,என்பவர் வேறு தரப்பில். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் இரண்டு சிறப்பு பரிசுகள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் கடம்பூர், பசுவந்தனை, நாரைகினறு, புளியம்பட்டி ஆகியோர் காவல்நிலையங்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சுரேந்திரன், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி.லோகேஸ்வரன் ஏற்பாடுகளையும் கடம்பூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோர் செய்தனர்.

    • ஆண்களுக்கான போட் டியை இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ஸ்ரீராம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    சுற்றுச்சூழலை பாதுகாத்திட வலியுறுத்தியும், விபத் துகளை தவிர்த்திடவும், பொது போக்குவரத்தை பலப்படுத்தவும் விழிப்பு ணர்வு மினி மாரத்தான் போட்டி அண்ணா விளை யாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    ஆயிரம் பேர்

    அரசு போக்குவரத்து மற்றும் விரைவு போக்கு வரத்து சி.ஐ.டி.யு. சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

    ஆண்களுக்கான போட் டியை இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ஸ்ரீராம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெண்களுக்கான போட்டியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் நாறும்பூநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்்.

    முதல் பரிசு ரூ. 5 ஆயிரம்

    ஆண்கள் மற்றும் பெண் கள் பிரிவில் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. போட்டி யில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியினை தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யா, உடற்கல்வி ஆசிரியர் கள் மற்றும் அரசு போக்கு வரத்து சி.ஐ.டி.யு. சங்கத்தின் தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர் ஜோதி, மாநில துணைத் தலைவர் செண்ப கம், மாவட்ட தலைவர் பீர்முகமது ஷா, மாவட்ட செயலாளர் முருகன், பொரு ளாளர் ராஜன் மற்றும் அரசுப்போக்குவரத்தில் செயல்படும் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போட்டிக்கான பாது காப்பு ஏற்பாடுகள், போக்கு வரத்து ஒழுங்குபடுத்துதல் பணிகளை பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் செய்திருந்தனர்். முடிவில் அரசு போக்கு வரத்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோதி நன்றி கூறினார்.

    • அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது.
    • வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) கும்பகோணம் மண்டலம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்.

    பொது போக்குவரத்தை பலப்படுத்திட, விபத்தை தடுத்திட, பொதுத் துறையை பாதுகாத்திட வலியுறுத்தி வருகிற 12-ம் தேதி காலை 6 மணி அளவில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது. நுழைவு கட்டணம் ரூ. 200 மட்டும். முன் பதிவிற்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். நாளை மாலை 6 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

    போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    மாரத்தானில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் 9894377805, 7010411396 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் புதுவையில் ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டும் புதுவை சுவாமி விவேகானந்தர் சேவை மையம் சார்பில் முதலியார்பேட்டை அர்ஜுனன் சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் உழந்தைக் கீரப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
    • மினி மராத்தான் கடலூர் ரோடு, ஏ.எப்.டிரோடு, புவன்கரே வீதி கடலூர் ரோடு வழியாக பள்ளியில் முடிந்தது.

    புதுச்சேரி:

    சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் புதுவையில் ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டும் புதுவை சுவாமி விவேகானந்தர் சேவை மையம் சார்பில் முதலியார்பேட்டை அர்ஜுனன் சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் உழந்தைக் கீரப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

    போட்டியை முதலியார்பேட்டை- கடலூர் சாலையில் அமைந்துள்ள அர்ஜுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலை பள்ளியில் சுவாமி விவேகானந்தர் சேவை மையத்தின் தலைவர் டாக்டர் க.வெற்றிச்செல்வம் தொடங்கி வைத்தார்.

    பள்ளி தலைமையாசிரியர் பாரி கந்தசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் மற்றும் சத்திரிய சேனா சேவக நிறுவனர் டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன், வல்லுநர் டாக்டர் கருணாகரன், விவேகானந்தர் சேவை மைய செயலாளர் செல்வம், பொருளாளர் கார்த்திகேயன், பயிற்சியாளர் ஆனந்தராஜ், டாக்டர் புகழேந்தி, முனியப்பன், கவுதம், கலந்து கொண்டனர். மினி மராத்தான் கடலூர் ரோடு, ஏ.எப்.டிரோடு, புவன்கரே வீதி கடலூர் ரோடு வழியாக பள்ளியில் முடிந்தது.

    மினி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்ககும் ரொக்கப் பரிசுகள், கேடயம் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியை சுவாமி விவேகானந்தர் சேவை மையத்தில் நிர்வாகிகளும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் அரவிந்தன் , ஆசிரியர் பாலா உள்ளிட்ட ஊழியர்கள் ஒருங்கிணைத்தனர்.

    • கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
    • மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    நாகர்கோவில்:

    பழையாற்றை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி இன்று கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது.

    கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தானில் பங்கேற்றனர்.

    மணக்குடி, புத்தளம், தெங்கம்புதூர், கோட்டார், சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம் வழியாக நாகர் கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிகிரண் பிரசாத், சரவணன் ஆகியோர் 21 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடி வந்தனர். 21 கிலோமீட்டர் தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பரசப்பா கலிடா 1 மணி நேரம் 9 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார். முதல் பரிசாக இவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    கேரளாவைச் சேர்ந்த ஜெகநாதன் 1 மணி நேரம் 9 நிமிடம் 59 வினாடிகளில் கடந்து இரண்டாவது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த வினோத் 1 மணி நேரம் 13 நிமிடம் 53 வினாடிகளில் கடந்து மூன்றாம் பரிசை பெற்றார்.

    இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும், மெட்டலும் வழங்கப்பட்டது. 21 கிலோ மீட்டர் பெண்களுக்கான பிரிவில் சமீதா முதல் பரிசு பெற்றார். இவர் 2 மணி நேரம் 37 நிமிடம் 42 வினாடிகளில் 21 கிலோ மீட்டரை கடந்தார். இவருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-வது பரிசை அஸ்வினி தட்டி சென்றார். இவர் 2 மணி நேரம் 50 நிமிடம் 43 வினாடிகளில் கடந்தார். இவருக்கு ரூ. 15,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 3-வது பரிசை தீபா பெற்றார். இவர் 3 மணி நேரம் 7 நிமிடம் 11 வினாடிகளில் கடந்தார். இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. ஆண்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பிரிவில் ராமசாமி 1 மணி நேரம் 42 நிமிடம் 42 வினாடிகளில் கடந்து முதல் பரிசு பெற்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மாரப்பன் 1 மணி நேரம் 44 நிமிடம் 26 வினாடிகள் கடந்து 2-வது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. டிக்ஸன் 1மணி நேரம் 47 நிமிடம் 11 வினாடிகள் கடந்து மூன்றாம் பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங் கப்பட்டது.

    10 கிலோமீட்டர் ஆண்களுக்கான மினி மாரத்தான் போட்டியில் தினேஷ் முதல் பரிசும், ஆனந்த அசோக் 2-ம் பரிசும், நிதீஷ்குமார் 3-ம் பரிசும் பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் போட்டியில் கிரிஸ்டல் முதல் பரிசும், கவுசிகா 2-வது பரிசும், அடினா ஆர்தார் 3-வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் சான்றிதழ்களும், மெட்டல்களும் வழங்கப்பட் டது.

    இதை தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாரத்தான் ஒருங்கிணைப்புச் செயலாளர் டாக்டர் தேவா பிரசாத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி அவரது 138- வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

    ×