என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mini super market
நீங்கள் தேடியது "mini super market"
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 100 சிறு சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNMinister #SellurRaju #MiniSuperMarket
சென்னை:
சென்னை தியாகராயநகரில் சதாசிவம் சாலையில் உள்ள ரேஷன் கடை அருகில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
இதுபோல தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் 100 மினி சூப்பர் மார்க்கெட் படிப்படியாக திறக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 100 சிறு சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட உள்ளன. சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் 5 மினி சூப்பர் மார்க்கெட் தொடங்கப்படுகிறது.
சிறு சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 300 வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து 5 சதவீதம் வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.
லாபம் நோக்கமில்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திறக்கப்பட உள்ளது.
தரமணி, ஐ.ஐ.டி., சூளைமேடு, காமராஜர் நகர், ராயப்பேட்டை, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளையொட்டி 4 மினி சூப்பர் மார்க்கெட் கடைகள் திறக்கப்படும்.
ஏற்கனவே திருச்சியில் மினி சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. மதுரையில் 3 இடங்களிலும் பிற மாவட்டங்களிலும் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி, கூடுதல் பதிவாளர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார், டி.யு.சி.எஸ். மேலாண்மை இயக்குனர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #SellurRaju

குடியிருப்பு பகுதிகளில் இந்த மினி சூப்பர் மார்க்கெட் அமைக்கப்படுதால் பொது மக்கள் தரமான பொருட்களை குறைந்த விலையில் பெற வசதியாக இருக்கும். மற்ற மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளை விட விலை குறைவாக பொருள் தரமாக இருக்கும்.
கோப்புப்படம்
லாபம் நோக்கமில்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திறக்கப்பட உள்ளது.
தரமணி, ஐ.ஐ.டி., சூளைமேடு, காமராஜர் நகர், ராயப்பேட்டை, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளையொட்டி 4 மினி சூப்பர் மார்க்கெட் கடைகள் திறக்கப்படும்.
ஏற்கனவே திருச்சியில் மினி சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. மதுரையில் 3 இடங்களிலும் பிற மாவட்டங்களிலும் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி, கூடுதல் பதிவாளர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார், டி.யு.சி.எஸ். மேலாண்மை இயக்குனர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #SellurRaju
×

X