என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » minister ma pa pandiarajan
நீங்கள் தேடியது "Minister Ma Pa Pandiarajan"
அரசுக்கு ஆதரவான கருத்து தெரிவிப்பதால் நடிகர் ரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் மீண்டும் கூறியுள்ளார்.
சென்னை:
அமைச்சர் மாபா பாண்டியராஜன் சமீபத்தில் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இது சம்பந்தமாக மாபா பாண்டியராஜன் மீண்டும் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
டி.வி.க்கு அளித்த பேட்டியில் ரஜினி- கமல் ஹாசன் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி கேட்டதால் நான் அந்த கருத்தை கூறினேன்.
ஏனென்றால், ரஜினிகாந்த் பல விஷயங்களில் எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தில் நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதேபோல் 8 வழிச்சாலை திட்டத்திலும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார். எனவேதான் அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.
அதே நேரத்தில் ரஜினி- கமல் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால், அவர்களுக்கு அடிமட்ட அளவில் போதிய பலம் இல்லை.
ரஜினிகாந்தாவது பூத் கமிட்டி அமைக்க சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், கமல்ஹாசன் கட்சியை தொடங்கிவிட்ட நிலையிலும் அடிமட்ட அளவுக்கு பலத்தை உருவாக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.
பல விஷயங்களில் கமல் ஹாசன் தி.மு.க. பக்கம் சாய்ந்து செயல்படுகிறார். அவர் கட்சி தொடங்கிவிட்டார். கொடியையும் அறிமுகப்படுத்திவிட்டார். ஆனால், பல விஷயங்களில் ஒரு தெளிவான முடிவை சொல்ல முடியவில்லை.
ரஜினிகாந்த் இன்னும் கட்சி பெயரை அறிவிக்கவில்லை. கமல்- ரஜினி இருவரும் மொத்த ஓட்டுகளில் தலா 5 சதவீதத்தை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்த சில கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுவிட்டன. டி.டி.வி. தினகரனுடன் சில நிர்வாகிகள் இணைந்து செயல்படும் பகுதிகளில் நாங்கள் புதிய நிர்வாகிகளை நியமித்து இருக்கிறோம்.
16 மாவட்டங்களில் இந்த பணிகள் முடிந்துவிட்டன. ஏற்கனவே இருந்த மாவட்ட நிர்வாக அமைப்பில் மாற்றங்களை செய்து 52 புதிய அமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம். இதன் எண்ணிக்கை இனனும் உயரலாம். இந்த பணிகள் முடிந்ததும் நாங்கள் வாக்காளர்களை சென்றடைவோம்.
இவ்வாறு மாபா பாண்டியராஜன் கூறினார். #Rajinikanth #MinisterPandiarajan
அமைச்சர் மாபா பாண்டியராஜன் சமீபத்தில் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இது சம்பந்தமாக மாபா பாண்டியராஜன் மீண்டும் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
டி.வி.க்கு அளித்த பேட்டியில் ரஜினி- கமல் ஹாசன் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி கேட்டதால் நான் அந்த கருத்தை கூறினேன்.
ஏனென்றால், ரஜினிகாந்த் பல விஷயங்களில் எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தில் நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதேபோல் 8 வழிச்சாலை திட்டத்திலும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார். எனவேதான் அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.
அதே நேரத்தில் ரஜினி- கமல் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால், அவர்களுக்கு அடிமட்ட அளவில் போதிய பலம் இல்லை.
நாளையே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அவர்கள் செயல்பட முடியாமல் அவர்களுடைய கட்சி பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும்.
பல விஷயங்களில் கமல் ஹாசன் தி.மு.க. பக்கம் சாய்ந்து செயல்படுகிறார். அவர் கட்சி தொடங்கிவிட்டார். கொடியையும் அறிமுகப்படுத்திவிட்டார். ஆனால், பல விஷயங்களில் ஒரு தெளிவான முடிவை சொல்ல முடியவில்லை.
ரஜினிகாந்த் இன்னும் கட்சி பெயரை அறிவிக்கவில்லை. கமல்- ரஜினி இருவரும் மொத்த ஓட்டுகளில் தலா 5 சதவீதத்தை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்த சில கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுவிட்டன. டி.டி.வி. தினகரனுடன் சில நிர்வாகிகள் இணைந்து செயல்படும் பகுதிகளில் நாங்கள் புதிய நிர்வாகிகளை நியமித்து இருக்கிறோம்.
16 மாவட்டங்களில் இந்த பணிகள் முடிந்துவிட்டன. ஏற்கனவே இருந்த மாவட்ட நிர்வாக அமைப்பில் மாற்றங்களை செய்து 52 புதிய அமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம். இதன் எண்ணிக்கை இனனும் உயரலாம். இந்த பணிகள் முடிந்ததும் நாங்கள் வாக்காளர்களை சென்றடைவோம்.
இவ்வாறு மாபா பாண்டியராஜன் கூறினார். #Rajinikanth #MinisterPandiarajan
×

X