search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister mm mani"

    கேரளாவில் சமூக வலை தளங்களில் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை மந்திரி மாணி மறுத்துள்ளார். #KeralaRain #MullaPeriyarDam #MMMani
    கொச்சி:

    கேரளாவில் பெய்யும் தொடர் மழையில் முல்லைப்பெரியாறு அணை 142 அடியை எட்டி நிரம்பியுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும் அதன் பாசன பரப்பு தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் ஆகும். இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறப்பு, பராமரிப்பு போன்ற கட்டுப்பாடுகள் தமிழக பொதுப் பணித்துறை வசம் உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கேரளா சுற்றுலா விடுதிகளையும் கட்டிடம் மற்றும் குடியிருப்புகளையும் கட்டியுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரும் போது இந்த கட்டிடங்கள் நீருக்குள் செல்லும் நிலை ஏற்படுகிறது.

    எனவே முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை என்று கூறி அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கேரளா சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    தற்போது மழை வெள்ளத்தை காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்கும் முயற்சியில் கேரளா ஈடுபட்டு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இதில் தமிழக அரசு 142 அடியை குறைக்க முடியாது அணை பாதுகாப்பாக உள்ளது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

    இதற்கிடையே கேரளாவில் சமூக வலை தளங்களில் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.


    இந்த தகவல் அறிந்த கேரளா மின்சாரத்துறை மந்திரி எம்.எம்.மாணி உடனே மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் பாதுகாப்பாக உள்ளது. முறைப்படி செயல்பட்டு வருகிறது. எனவே வதந்திகளை கேரள மக்கள் நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் கேரள வெள்ள சேதத்துக்கு மின்சார வாரிய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கேரளாவில் உள்ள பெரும்பாலான அணைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கவே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் அணை திறப்பு முழுவதும் மின்வாரிய அதிகாரிகள் வசம் உள்ளது.

    மழை பெய்து அணை நிரம்பிய நிலையிலும் குறைந்த அளவு தண்ணீரே திறந்து நீர்மட்டத்தை சீராக வைத்து இருந்தனர். ஆனால் எதிர்பாராமல் மழை கொட்டியதால் ஒரே நேரத்தில் அனைத்து அணைகளையும் திறந்து விட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவுக்கு வித்திட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. #KeralaRain #MullaPeriyarDam #MMMani
    ×