search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Pandiyarajan"

    மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்துக்கு இணையாக மொழிப்போர் தியாகிகளுக்கும் வழங்க அரசு முன் வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறியதாவது:-

    சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய தொகையின் மூன்றில் 2 பங்கு தொகையை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் மொழிப்போர் தியாகிகளுக்கு தமிழக அரசுதான் முழுத் தொகையையும் வழங்குகிறது. அவர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட உள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.900 வரை அதிகமாக கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் தேசதுரோகிகள் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். #Greenwayroad #MinisterPandiarajan

    ராயபுரம்:

    வட சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி மீட்பு வெற்றி பொதுக் கூட்டம் கொருக்குப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தங்கத்தமிழ்செல்வன் வீரத்தை பாராட்டுகிறேன். வெகு விரைவில் ஆண்டிப்பட்டியில் தேர்தலில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு வழி வகுத்த தங்கத் தமிழ் செல்வனுக்கு நன்றி.

     


    பசுமை வழி சாலை திட்டம் மத்திய அரசிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் கோடி நிதி பெற்று செயல்படுத்தபடும் மிக பெரிய திட்டமாகும். இந்த திட்டம் மிக பெரிய பொருளாதார தாக்கத்தை உருவாக்கும். விவசாய நிலங்களை கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்துவது உண்மை இல்லை அவர்களை திசை திருப்பி தூண்டி விடுவது மிக பெரிய தேசதுரோகம்.

    தினகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விரைவில் தீர்ப்பு வரும் ஆர்.கே நகரில் விரைவில் இடைதேர்தல் வரும். ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று கொடுத்த வாக்குகுறுதிகளை நிறைவேற்றும்.

    தினகரன் ஆர்.கே நகர் வருவதில்லை என்பதை விட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இல்லை என்பதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நடிகர் ராம ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #Greenwayroad #MinisterPandiarajan

    தமிழ்நாட்டில் நக்சலைட்கள் மற்றும் பயங்கரவாதிகள் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #MinisterPandiyarajan
    சென்னை:

    தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் பயங்கரவாதம் இல்லை. தமிழகத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் இல்லை. ஜெயலலிதா இருந்தபோது எப்படி பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டதோ, அதேபோல் தற்போதும் ஒடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், காவிரி உள்பட அ.தி.மு.க. அரசின் சாதனைகளை தி.மு.க.வால் எதிர்கொள்ள முடியவில்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் எந்தவிதமான தீர்ப்பு வந்தாலும் அதை தமிழக அரசு எதிர்கொள்ளும் என தெரிவித்துள்ளார். #MinisterPandiyarajan
    ×