search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Miss South Africa"

    • மியா லு ரூக்ஸ்-க்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது.
    • சிடிம்மா அடெட்ஷினா இறுதிப்போட்டி வரை தேர்வானார்.

    ஜோகன்னஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் 2024-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றன. இதில் அந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்களுக்கு பல்வேறு கட்ட தகுதித்தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவில் மியா லு ரூக்ஸ் (வயது 28) என்ற பெண் தென் ஆப்பிரிக்க அழகி என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

    இதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது. பின்னர் `கொஹ்லியர் இம்பிளான்ட்' என்ற சிகிச்சையால் தான் ஒலிகளை உணர்கிறார். இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக காது கேட்காத மாற்றுத்திறனாளி ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கனவு இன்று நிஜமாகி விட்டது. இதேபோல் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மற்ற மாற்றுத்திறனாளிகளின் கனவுகளை நனவாக்கவும் தான் விரும்புகிறேன். அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகவே தான் இந்த போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே சிடிம்மா அடெட்ஷினா இறுதிப்போட்டி வரை தேர்வானார். ஆனால் பெற்றோர் நைஜீரியா, மொசாம்பிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரது தாயகம் குறித்த சர்ச்சைகள் எழுந்தன.

    இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார். இவ்வாறு பல தடைகளைத் தாண்டியே தற்போது மாற்றுத்திறனாளியான மியா லு ரூக்ஸ் தென் ஆப்பிரிக்க அழகியாக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×