search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mob lynching"

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுவை கடத்தியதாக நடத்தப்பட்ட கும்பல் தாக்குதலில் ஒருவர் பலியான சம்பவம் தொடர் அச்சத்தை நிலைநாட்டுகிறது. #UttarPradesh #MobLynching
    லக்னோ:

    நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் நடத்தப்படும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, அறியாமையால் சில மக்கள் நடத்தும் கும்பல் தாக்குதல்களினால் உயிரிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாடு கடத்தியதாக சிலர் மீது பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    தாக்கப்பட்டவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அறியாமையினால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களினால் தொடர்ந்து உயிர்கள் பலியாவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது. #UttarPradesh #MobLynching
    அசாம் மாநிலம் பிஸ்வந்த் மாவட்டத்தில் பசுவை கடத்தியதாக 4 பேர் மீது அப்பகுதி மக்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். #MobLynching #Assam
    திஸ்பூர்:

    இந்தியாவில் சமீபத்தில் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குழந்தை கடத்தல், பசு கடத்தல் போன்ற பல்வேறு  வதந்திகளால் ஏற்படும் விளைவுகள் உயிர்பலி வாங்குவதாகவே இருக்கின்றன. இதுபோன்ற கும்பல் தாக்குதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

    இந்நிலையில், அசாம் மாநிலம் பிஸ்வந்த் கிராமத்தில் பசு கடத்தியதாக 4 பேர் மீது அப்பகுதி மக்கள் நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சங்கட் டண்டி என்பவருக்கு சொந்தமான 2 மாடுகளை 4 பேர் வாகனத்தில் கடத்திச் சென்றதாகவும், அதனை பார்த்த சங்கட், கூச்சலிட்டபோது ஊர்மக்கள் அந்த கும்பலை வழிமறைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான திபென் ராஜ்போங்ஸ்கி என்பவர் உயிரிழந்தார். மேலும், புஜன் காடோவர், புல்சந்த் சாஹு, பிஜோய் நாயக், ஆகிய 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பசுக்களை கடத்தியதாக 4 பேர் மீதும், கும்பல் தாக்குதலுக்காக தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குற்றங்கள் எத்தகையதாக இருந்தாலும், அதற்கு மக்கள் தண்டனை கொடுப்பதும், சட்டத்தை கையில் எடுப்பதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தவிர்க்கப்படும்போதே இதுபோன்ற சம்பவங்களை முற்றிலுமாக தடுக்க முடியும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். #MobLynching #Assam
    பசு காவலர்கள் மற்றும் குழந்தை கடத்தல் வதந்தியை நம்பி சட்டத்தை கையில் எடுத்து கும்பலாக தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த, மத்திய உள்துறை மந்திரி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. #MobLynching
    புதுடெல்லி:

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. மேலும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் குழந்தை கடத்தல் வதந்திகளை நம்பி பலர் அப்பாவிகளை அடித்துக்கொன்றுள்ளனர்.

    இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதனை தடுக்க புதிய சட்டத்தை அரசு இயற்றலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.

    சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசு குண்டர்களால் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த வகை கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



    இதன் முதல்கட்ட பணியாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு நான்கு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகளை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான மூத்த மந்திரிகள் குழுவிடம் சமர்பிக்கும்.

    ராஜ்நாத் சிங் தலைமையிலான மந்திரிகள் குழு இந்த பரிந்துரைகளை பரிசீலித்து, அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து பின்னர், தங்களது பரிந்துரையை பிரதமர் மோடியிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×