என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » modi deve gowda
நீங்கள் தேடியது "Modi Deve Gowda"
அசாம் மாநிலத்தில் தன்னால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாதது குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேதனை தெரிவித்துள்ளார். #IndiasLongestBridge
பெங்களூரு:
வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து போகிபீல் என்ற இடத்தில் 4.94 கி.மீ. நீளத்தில் இரண்டடுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
1997-ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டு 2002-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு இடையூறுகளால் தொய்வடைந்த கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் 3-ம்தேதி முடிவடைந்து, சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
இப்பாலம் இந்தியாவின் மிக நீளமான ரெயில்வே பாலம் ஆகும். ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலம் ஆகும். இதில், மேலே மூன்று வழிச்சாலையும் கீழே இரண்டு வழி ரெயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன. 5900 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இப்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்நிலையில், இந்த பாலம் திறப்பு விழாவுக்கு தனக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாதது குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேதனை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கர்நாடக மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பங்கேற்றார். அப்போது அவரை சந்தித்த நிருபர்கள், ‘‘உங்களால் அடிக்கல் நாட்டப்பட்ட பாலம் இன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லையா?’’ என்று கேட்டனர்.
இதற்கு படுவேகமாகவும் வேதனையாகவும் பதிலளித்த தேவேகவுடா, ‘‘அட ராமா! என்னை யார் இப்போது நினைவில் வைக்கப்போகிறார்கள். சில நாளிதழ்களாவது இதை சுட்டிக்காட்டி இருக்கலாம். நான் பிரதமாரக இருந்தபோது அடிக்கல் நாட்டிய இந்த பாலத்துக்கு அப்போதே 100 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி இருந்தேன். இன்று மக்களும் என்னை மறந்து விட்டார்கள்’’ என்று குறிப்பிட்டார்.-

×

X