என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » modi wife
நீங்கள் தேடியது "modi wife"
திருமணம் செய்த மனைவியை கைவிட்ட பிரதமர் மோடிக்கு குடும்ப அமைப்பின் மீது எப்படி மதிப்பிருக்க முடியும்? என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். #ChandrababuNaidu #Modiwife #Jashodaben
அமராவதி:
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவரது மகனின் பெயரை சுட்டிக்காட்டி ‘லோகேஷின் தந்தை’ என்று கிண்டலாக கூறினார்.
இதனால், ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் இன்று நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் மனைவி பெயரை குறிப்பிட்டு கடுமையாக தாக்கிப் பேசினார்.
‘நான் ஒரு குடும்பஸ்தன். எனது குடும்பத்தாரை நான் மிகவும் நேசிக்கிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால், பிரதமர் மோடிக்கு மனைவியும் இல்லை, குடும்பமும் இல்லை. ஆனால், இன்று அவர் என்னுடைய மகனை குறிப்பிட்டு பேசியதால் மோடியின் மனைவியைப்பற்றி நான் இப்போது பேச வேண்டியுள்ளது.
மக்களே!, நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மனைவியின் பெயர் ஜசோதாபென். திருமணம் செய்த மனைவியை கைவிட்ட பிரதமர் மோடிக்கு குடும்ப அமைப்பின் மீது எப்படி மரியாதை இருக்க முடியும்?’ என சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டையும் நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகளையும் பிரதமர் மோடி சீரழித்து வருவதாக குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, மோடி இன்று குண்டூரில் பேசிய பொதுக்கூட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பணம் கொடுத்து அந்த கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.
இதன் மூலம் மோடியின் ஆந்திர மாநில சுற்றுப்பயணம் தோல்வியில் முடிந்துள்ளது. மோடியின் பா.ஜ.கவை இங்குள்ள மக்கள் புறக்கணித்து விட்டனர் என்பது அவருக்கு நன்றாக புரிந்து விட்டது. தெலுங்கு பேசும் மக்கள் தங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு தகுந்த பாடத்தை உரிய நேரத்தில் கற்பிப்பார்கள் என்பது மீண்டும் ஒருமுறை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். #ChandrababuNaidu #Modiwife #Jashodaben
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X