search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mohammed abbas"

    லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அலஸ்டைர் குக் (70) மட்டும் நிலைத்து நின்று விளையாட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. அசார் அலி (50), ஆசாத் ஷபிக் (59), பாபர் அசாம் (68), ஷதாப் கான் (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 114.3 ஒவர்கள் விளையாடி 363 ரன்கள் குவித்தது.

    முதல் இன்னிங்சில் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட்டை (68) தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் இங்கிலாந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்ததது.


    அமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த இங்கிலாந்து வீரர்

    6 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் என்று தத்தளித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு ஜோஸ் பட்லர் உடன் பெஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 56 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்தது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி மேலும் 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தானுக்கு 150 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கலாம் என்று நினைப்புடன் இங்கிலாந்து இன்றைய 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

    பட்லர் 66 ரன்னுடனும், பெஸ் 55 ரன்னுடனும் தொடர்ந்து விளையாடினார்கள். ஆட்டம் தொடங்கிய 8-வது பந்தில் பட்லர் மேலும் ஒரு ரன் எடுத்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். 80-வது ஓவரை முகமது அப்பாஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பட்லர் எல்பிடபிள்யூ ஆனார்

    அடுத்த ஓவரில் மார்க்வுட் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் டக்அவுட்டில் வெளியேற, அதற்கு அடுத்த ஓவரில் முகமது அமிர் பெஸ்-ஐ க்ளீன் போல்டாக்கினார். இதனால் இங்கிலாந்து 82.1 ஓவரில் 242 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.


    சேஸிங் செய்த சந்தோசத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்

    இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து 4.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 7 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 63 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தானுக்கு 64 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    64 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 12.4 ஓவர் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 66 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை பாகிஸ்தான் இங்கிலாந்து செல்லும்போது தொடரை 2-2 என சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. 2-வது இன்னிங்சில் முகமது அமிர், முகமது அப்பாஸ் தலா நான்கு விக்கெட்டுக்களும், சதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய முகமது அப்பாஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜூன் 1-ந்தேதி லீட்ஸில் தொடங்குகிறது.
    ×