search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohanraja Speech"

    • கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சுமார் 60 சதவீதம் அளவிற்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
    • பிரதமர் மோடி மலை மாவட்டமான நீலகிரி கூடலூர் தெப்பக்காட்டிற்கு வந்து பாகன் தம்பதியை சந்திக்க உள்ளார்.

    ஊட்டி,

    பிரதமர் மோடி நாளை முதுமலைக்கு வருகிறார். அங்கு அவர் யானைகள் முகாமை பார்வையிடுகிறார்.

    ெதாடர்ந்து ஆவணப்படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியை பாராட்டுவதோடு, படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி யானைகளையும் பார்வையிடுகிறார்.

    பிரதமரின் நீலகிரி வருகையை முன்னிட்டு அவருக்கு சிறப்பான வரவேற்புகள் அளிக்க மாவட்ட பா.ஜ.கவினர் தயாராகி வருகின்றனர்.

    முதுமலை வரும் பிரதமருக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கூறுகையில், பிரதமர் மோடி எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார். ஓலைகுடிசையில் இருந்தவர்களுக்க கான்கிரீட் வீடு கொடுத்து அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. சாலையோர வியாபாரிகளுக்கு வியாபார கடன் கொடுத்துள்ளார்.

    ஜல்ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தி கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சுமார் 60 சதவீதம் அளவிற்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஜல்ஜீவன் திட்டம் ஊரக பெண்களின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. முன்பு, அவர்கள் பல மைல் தூரம் நடந்து சென்று தலையில் பானைகளை சுமந்து வீடு திரும்ப வேண்டியிருந்தது.தற்போது, ஜல்ஜீவன் திட்டத்தால், குடிநீர் வீட்டு வாசலிலேயே கிடைப்பதால், அவர்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது.

    எந்த ஒரு அரசியல் தலைவரும் சாதாரண சாமானிய மக்களை சந்திக்க வந்ததில்லை.

    தற்ேபாது பிரதமர் மோடி மலை மாவட்டமான நீலகிரி கூடலூர் தெப்பக்காட்டிற்கு வந்து பாகன் தம்பதியை சந்திக்க உள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. முதுமலை வரும் பிரதமருக்கு நீலகிரி மாவட்ட பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×