search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "molested complaint"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.
    • நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.

    மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் புகாரளித்த பெண்களுடன் துணை நிற்பதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியிருப்பதாவது:-

    பாதிக்கப்பட்ட பெண்களுடன் ஒரு தாயாகவும் ஒரு பெண்ணாகவும் துணை நிற்கிறேன்.

    பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.

    பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் துணை நிற்க வேண்டும்.

    நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.

    பெண்களே வெளியே வந்து பேசுங்கள். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை எந்த நிலையிலும் சமரசம் செய்யாதீர்கள்.

    No என்றால் கண்டிப்பாக No-தான் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காதீர்கள் என்று பெண்களுக்கு குஷ்பு அறிவுறுத்தி உள்ளார்.

    • நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
    • கேரள அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக கேரளாவின் முன்னணி நடிகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    அதன் தொடர்ச்சியாக கேரள சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் பாலின பாகுபாடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தனது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டே கேரள அரசிடம் சமர்ப்பித்தது.

    ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வெளியிடாமல் வைத்திருந்தது. இந்தநிலையில் கடந்த வாரம் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை அரசு வெளியிட்டது.

    அந்த அறிக்கையில் மலையாள நடிகைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக பரபரப்பு தகவல்கள் இடம் பெற்று இருந்தன. பட வாய்ப்புக்காக நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மலையாள திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள்தான் அதிகளவில் நடிகைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது. நீதிபதி ஹேமா கமிட்டியின் இந்த அறிக்கை கேரள மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    நீதிபதியின் அறிக்கை வெளியான நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை ஏராளமான நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். இது மலையாள திரையுலகில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மேற்குவங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா கேரள இயக்குனர் ரஞ்சித் மீதும், ரேவதி சம்பத் என்ற நடிகை நடிகர் சித்திக் மீதும், மெஸ்சா என்ற காஸ்டிங் கலைஞர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வும் பிரபல நடிகருமான முகேஷ் மீதும், ஜூபிதா என்ற நடிகை, நடிகர் சுதீஷ் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.


    இதையடுத்து கேரள சினிமா அகாடமி தலைவர் பொறுப்பில் இருந்து இயக்குனர் ரஞ்சித்தும், மலையாள நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக்கும் ராஜினாமா செய்தனர்.

    இந்தநிலையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெய சூர்யா, இடவேலா பாபு, மணியன்பிள்ளை ஆகியோர் மீது கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறினார். ஆனால் நடிகர் முகேஷ் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நடிகர் மணியம்பிள்ளை தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று கூறியுள்ளார். தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையே பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட நடிகர்களை கேரள கம்யூனிஸ்டு அரசு காப்பாற்ற முயற்சி செய்வதாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன் குற்றம் சாட்டினார். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தப் போவதாக கேரள மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது. நேற்று கொல்லத்தில் உள்ள நடிகர் முகேஷ் வீட்டுக்கு மகளிர் காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர். முகேஷ் வீட்டை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

    நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரசார் கோஷமிட்டு நீண்ட நேரம் தர்ணா செய்தனர். இது கேரள அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மேலும் 3 நடிகைகள் தாங்கள் நடிக்க சென்ற போதும், நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற போதும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பரபரப்பு பேட்டியளித்து உள்ளனர். அவர்களில் பிரபல நடிகை கீதாவிஜயனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகை கீதா விஜயன் டைரக்டர் துளசிதாஸ் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். துளசிதாசால் தனக்கு பாலியல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. என்றாலும் அதன் பிறகு அவர் தனக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்காமல் செய்தார் என்று குற்றம் சாட்டி உள்ளார்.

    மேலும் அஞ்சலி அமீர், சோபியா நடிகைகளும் பரபரப்பு பாலியல் புகார்களை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக மலையாள பட உலகில் பாலியல் புகார்கள் சூறாவளி புயல் போல் வீசத் தொடங்கி உள்ளது.

    இதற்கிடையே ஹேமா அறிக்கையின் அடிப்படையிலும் பாலியல் புகார்களை தெரிவிக்கும் நடிகைகளின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்த கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 7 காவல் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை கேரள மாநில அரசு அமைத்து உள்ளது.

    இந்த விசாரணை குழுவினர் இன்று (செவ்வாயக் கிழமை) தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக பாலியல் புகார்கள் தெரிவித்துள்ள நடிகைகளிடம் விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த ஆதாரங்களை திரட்ட முடிவு செய்து இருக்கிறார்கள். அதன் பிறகு மலையாள நடிகர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மாடல் அழகியும், எழுத்தாளருமான பத்மாலட்சுமி நான் 16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறியுள்ளார். #PadmaLakshmi
    நியூயார்க்:

    அமெரிக்க வாழ் இந்தியர் பத்மாலட்சுமி (48). சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். மாடல் அழகியான இவர் எழுத்தாளர் மற்றும் நடிகையும் ஆவார். இவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இவர் அமெரிக்காவின் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தன்னைப் பற்றி எழுதியுள்ளார். அதில் “நான் எனது 16-வது வயதில் கற்பழிக்கப்பட்டேன். அப்போது 23 வயது வாலிபருடன் ‘டேட்டிங்’ல் இருந்தேன்.


    அந்த நபரும் என்னுடன் ஒரு வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன். மிகவும் சோர்வாகவும், களைப்பாகவும் இருந்ததால் படுக்கையில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டேன்.

    அப்போது அந்த நபர் என்னை கற்பழித்து விட்டார். இத்தகைய நடவடிக்கையில் ஒரு ஆண் எந்தவித பாதிப்புக்கும் ஆளாவதில்லை. ஆனால் பெண்ணின் வாழ்க்கை சீரழிகிறது. அவளை யாரும் அன்புடன் நடத்துவதில்லை.

    எனக்கு நடந்த இந்த துயர சம்பவத்தை அப்போது நான் வெளியில் சொல்லவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அதிபர் டொனால்டு டிரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரட் கவான்னா மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து எனக்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்தும் எழுத முடிவு செய்தேன்” என கூறியுள்ளார். #PadmaLakshmi
    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மகன் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மா. இவருடைய மகன் வினோத் வர்மா, தன்னை 2011-ம் ஆண்டு கற்பழித்து விட்டதாக 28 வயது பெண் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 21-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ.வும், அவருடைய மகனும் கைது செய்யப்படாவிட்டால், தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அப்பெண் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், தனது குற்றச்சாட்டு பற்றிய விவரங்களை தெரிவிக்க முதல்-மந்திரியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அப்பெண்ணுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தனது நற்பெயரை சீர்குலைக்க சமாஜ்வாடி கட்சி தீட்டிய சதி இது என்று ரோஷன்லால் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
    ×