search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money dispute"

    • காரில் செல்லும் போது, விமல் யார் நீங்கள்? எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என கேட்டார்.
    • கும்பலிடம் இருந்து தப்பி வந்த விமல் நேராக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் ஸ்ரீ குமரன் நகரை சேர்ந்தவர் விமல்(வயது36). தொழில் அதிபர்.

    இவரது வீட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த சரவணன் (45) என்பவர் குடியிருந்தார். அப்போது இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி விமல் தனது காரில் உஞ்சப்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து 2 கார்கள் வேகமாக வந்தன. தொடர்ந்து விமலின் காரை முந்தி வந்த 2 கார்களும், விமலின் காரை வழிமறித்து நின்றது.

    இதனால் விமலும் தனது காரை நிறுத்தி விட்டார். அப்போது எதிரே நின்ற 2 கார்களில் இருந்து 5 பேர் கும்பல் திபுதிபுவென இறங்கினர். இறங்கிய வேகத்தில், விமலின் காரை நோக்கி அந்த கும்பல் சென்றது.

    பின்னர், அவர்கள், விமலை தங்களுடன் வா, உன்னிடம் பேச வேண்டும் என அழைத்தனர். அவர் வரமறுக்கவே, வலுக்கட்டாயமாக விமலை மிரட்டி, அவரது காரிலேயே ஏற்றி கடத்தி சென்றனர்.

    காரில் செல்லும் போது, விமல் யார் நீங்கள்? எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் சரவணன் தான் உன்னை கடத்த சொன்னார். நீ அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடு என கூறி மிரட்டினர்.

    பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டியதுடன், சரமாரியாக தாக்கினர். இதனால் பயந்து போன விமல் தனது நண்பர்கள் மற்றும் மனைவியிடம் பேசி, ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை வாங்கி சரவணனின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், விமலிடம் ஒரு வெற்று பத்திரத்தை காண்பித்து, கையெழுத்து வாங்கி கொண்டனர். பின்னர் காரை அவினாசி அடுத்த விஜயமங்கலம் பகுதியில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.

    கும்பலிடம் இருந்து தப்பி வந்த விமல் நேராக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், சரவணன் தான் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழில் அதிபர் விமலை ஆட்கள் வைத்து கடத்தி தாக்கியதுடன், பணத்தை பறித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மருமகளை மாமனார், மைத்துனர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே மணக்கரை அவரி விளக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை (வயது 78). இவரது மகன் அய்யப்பன் கோபு (43) இவரது மனைவி துர்கா (38).

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராணுவ வீரரான அய்யப்பன்கோபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து துர்கா கணவரின் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மாமனார் ஆறுமுகம் பிள்ளைக்கும், மருமகள் துர்காவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் பிள்ளை அவரது மகன் மது (43) இருவரும் சேர்ந்து துர்காவை சரமாரியாக தாக்கினார்கள். கல்லாலும், கம்பாலும் தாக்கியதில் துர்கா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துர்காவின் சகோதரர் பகவத்சிங் இரணியல் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ஆறுமுகம் பிள்ளை, அவரது மகன் மது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    எனது மகன் அய்யப்பன் கோபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு அவருக்கு எல்லை பாதுகாப்பு படையிலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த பணம் எனது மருமகள் துர்காவிடம் வந்து சேர்ந்தது. இந்த பணம் பிரச்சினை தொடர்பாக எனக்கும் எனது மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    நேற்றும் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது எனது இன்னொரு மகன் மது அங்கு வந்தார். ஆத்திரமடைந்த நாங்கள் துர்காவை சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    போலீசார் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருமகளை மாமனார், மைத்துனர் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார்.
    • சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகையின் போது அந்த ஊரை சேர்ந்த பொது மக்களுக்குள் பணம் வசூல் செய்து அவர்களுக்கு வட்டிக்கு பணம் ஏலம் விடுவது வழக்கம். அதேபோல் கடந்த தீபாவளி அன்று பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார். அப்போது அதே ஊரை சேர்ந்த பூபதி, முருகேசன், சின்னதுரை, முத்துசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து சிவக்குமாரிடம் தகராறு செய்தனர்.

    பின்னர் சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர். பின்னர் அங்கிருந்து ஊர் முக்கியஸ்தர்கள் சண்டையை விலக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிவக்குமாருக்கு காயம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. பின்னர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    பாபநாசம் அருகே கடன் தகராறில் விவசாயியை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே மணப்படுகை கிராமம் காலனி தெருவில் வசித்து வருபவர் சாமிநாதன் (வயது 33). விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவரிடம் ரூ.11 ஆயிரத்து 500 கடன் பெற்றிருந்தார். இந்த கடனில் ரூ.10 ஆயிரம் வரை செலுத்திவிட்டார். மீதி ரூ.1500 தராததால் மாதவன் குடும்பத்தை சேர்ந்தவர்களான கல்யாண ராமன், ஜானகிராமன், ரகுராமன், ரகுநாதன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.

    இதில் சாமிநாதன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ் பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குபதிவு செய்து கல்யாணராமன் வயது 25 என்பவரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சிவக்குமார் கல்யாணராமனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.

    திருப்பூரில் ரூ. 300 தகராறில் பனியன் தொழிலாளியை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    பல்லடம் அவரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவரது மகன் கார்த்திக் (28). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் நடந்து சென்றார். அப்போது அவரை வழி மறித்த 6 பேர் கும்பல் உருட்டுக்கட்டையால் தாக்கியது. இதில் கார்த்திக் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார்.

    இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. கார்த்திக் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    அதில் சரவணன், ராஜா, வெங்கடேஷ், முத்துக்குமார் மற்றொரு ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாங்கள் ஒரு அணியாகவும், கார்த்திக் ஒரு அணியாகவும் ரூ. 300 பந்தயம் கட்டி கிரிக்கெட் விளையாடினோம்.

    விளையாட்டில் எங்கள் அணி தோல்வி அடைந்து விட்டது. அதற்கான பணத்தை கார்த்திக் கேட்டார். ஆனால் நாங்கள் கொடுக்கவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எங்கள் பகுதிக்கு வந்த கார்த்திக் எங்களை தரக்குறைவாக பேசினார். இதனால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நாங்கள் அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினோம். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. லேசான காயம் தான் என நினைத்து இருந்தோம். ஆனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    திருச்சி அருகே இன்று மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் வடக்குஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 40). இவரது மனைவி மகாலட்சுமி (36) . இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர். பாலசந்தர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

    சிங்கப்பூரில் பணியாற்றி வந்த போது, பாலசந்தர் அவரது மனைவிக்கு பணம் அனுப்பியுள்ளார். ஊருக்கு திரும்பியதும் அந்த பணத்தை எங்கே என்று மனைவியிடம் கேட்டுள்ளார். அவர் 2 மகன்களின் கல்விக்கு செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசந்தர், இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகாலட்சுமியின் நடத்தையில் பாலசந்தர் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் கொலை செய்தாரா? என்றும் பாலசந்தரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி அருகே பணத் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(33). தொழிலாளி. இவரது சகோதரிகள் ஜெயலட்சுமி, சின்னம்மாள். இவர்கள் 3 பேரும் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தனர். 

    அப்போது அய்யப்பன் அவரது தங்கை ஜெயலட்சுமிக்கு ரூ.28 ஆயிரத்தை கடனாக கொடுத்தார். 

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அய்யப்பனும் அவரது சகோதரிகளும் அவர்களது சொந்த ஊரான சிறுமங்கலத்திற்கு வந்தனர். அதன் பின்னர் அய்யப்பன் கடனாக கொடுத்த ரூ.28 ஆயிரத்தை அவரது சகோதரி ஜெயலட்சுமியிடம் கேட்டார். அதற்கு அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதில் ஜெயலட்சுமிக்கும் அய்யப்பனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அய்யப்பனை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை ஜெயலட்சுமி அவரது அக்கா மகன் பாலகிருஷ்ணன்(19) என்பவரிடம் கூறினார்.

    இதை தொடர்ந்து பாலகிருஷ்ணன், அய்யப்பனிடம் சென்று எதற்காக ஜெயலட்சுமியிடம் பணம் கேட்டு தகராறு செய்கிறாய் என்று கேட்டார். இதில் அவர்கள் 2 பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அய்யப்பனின் வயிற்றில் குத்தினர். 

    இதில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே பாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். காயம் அடைந்த அய்யப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    இது குறித்து வரஞ்சரம் போலீசில் அய்யப்பன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
    பணத்தகராறில் டீக்கடை உரிமையாளரை உருட்டுகட்டையால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி டி.வி.எஸ்.டோல் கேட் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் கருப்பசாமி (28). இவர் தொழிலுக்காக திருச்சி தில்லை நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். பின்னர் அந்த பணத்தை திருப்பி செலுத்த வில்லை. 

    இந்நிலையில் ரமேஷ்குமார் தனது உறவினர் சபரிசீனிவாசனுடன் டீக்கடைக்குசென்று கருப்பசாமியிடம் பணம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்குமார் உருட்டுகட்டையால் கருப்பசாமியை தாக்கினர். இதில் அவரின் மண்டை உடைந்தது. 

    இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குபதிவு செய்து ரமேஷ்குமார், சபரிசீனிவாசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    கொடுமுடி அருகே வீட்டில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டை புதூரை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி அருக்காணி (வயது 70).

    இவர்களுக்கு திலகவதி (49), செல்வி (40) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. திலகவதி கரூரிலும், செல்வி சுமைதாங்கி புதூரிலும் வசிக்கிறார்கள்.

    செல்வியின் கணவர் இறந்துவிட்டார். எனவே செல்வி வீட்டில் முத்துசாமி தங்கி உள்ளார். சம்பவத்தன்று அருக்காணியும் அங்கு சென்றிருந்தார். பின்னர் சம்மங்குட்டைபுதூருக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் அருக்காணி பிணமாக கிடந்தார். கட்டிலில் கிடந்த அவரது வாய் பகுதியில் பலத்த காயம் இருந்தது. அதில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.

    அவரை யாரோ அடித்து கொலை செய்துள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பெருந்துறை டி.எஸ்.பி., கொடுமுடி போலீஸ் இன்ஸ் பெக்டர் மணிகண்டன் ஆகி யோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்ததையும், அருக்காணி டி.வி. பார்த்ததையும் சிலர் பார்த்துள்ளனர்.

    டி.வி. காலை 9 மணி வரை ஆப் செய்யப்படவில்லை. இதனால்தான் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது இரவு 10.30 மணிக்கு மேல்தான் யாரோ அருக்காணியை கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    அருக்காணியின் வாய் பகுதியில் கொலையாளி தாக்கியுள்ளார். அந்த தாக்குதலால் அருக்காணியின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பல பற்கள் உடைந்துள்ளன. இதனால் வாய் பகுதியில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.

    முதலில் இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருக்காணி ரத்த வாந்தி எடுத்து இறந்ததாக பேசியுள்ளனர். போலீசார் வந்து பார்த்த பின்னர்தான் வாய் பகுதியில் கொலையாளி தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.

    அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தாராம். சமீபத்தில் 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தனர். அதில் ரூ. 8 லட்சம் பணம் வந்தது. அதில் ரூ. 4 லட்சத்தை மகள்களுக்கு கொடுத்தனர். ரூ. 2 லட்சத்தை உறவினர் ஒருவருக்கு கொடுத்ததாகவும், மீதி பணத்தை வட்டிக்கு கொடுத்ததாகவும் தெரிகிறது.

    எனவே வட்டிக்கு பணம் பெற்றவர்களிடம் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலை நடந்தபோது அருக்காணி சத்தமிட்டுவிடக்கூடாது என்பதற்காக கொலையாளி வாயில் தாக்கினாரா? அல்லது அருக்காணி யாரையாவது திட்டியதால் வாயில் தாக்கப்பட்டாரா? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    அருக்காணி நகை அணிந்திருந்ததாகவும் அந்த நகையை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.சிலர் அருக்காணி நகையை அவ்வப்போது கழற்றி வைத்துவிடுவார் என்றும் கூறுகிறார்கள்.

    எனினும் அந்த நகைக்காக அருக்காணி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை தெற்குவாசலில் குடிபோதையில் நண்பர்களால் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை கீரைத்துறை கிருதுமால் நதிக்கரை சாலையைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 17). திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்ற சூர்யாவிடம் கடன் வாங்கினார். அதை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தவில்லை.

    இந்த நிலையில் தீபாவளி விடுமுறையில் சதீஷ்குமார் மதுரை வந்திருந்தார். அவரை முத்து போனில் தெற்குவாசலுக்கு வருமாறு அழைத்தார்.

    தெற்குவாசல் பாலத்தின் கீழ் சதீஷ்குமாருடன், நண்பர்களான முத்து ஜெயபால், அண்ணாமலை, மோகன், மதியழகன் ஆகியோர் மது குடித்தனர்.

    அப்போது கடனை முத்து திருப்பிக்கேட்டார். அதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம்-மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்து, சதீஷ்குமாரை பீர் பாட்டிலாலும், கத்தியாலும் குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன்பிறகு நண்பர்கள் ஓடிவிட்டனர்.

    இது குறித்து தெற்குவாசல் போலீசுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்து உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரை தேடி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரியில் செலவுக்கு பணம் கொடுக்காததால் பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த அண்ணன் மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலை கணபதி தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி ராணி (வயது 58).

    கிருஷ்ணகிரியில் உள்ள ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ராணிக்கு அண்ணன் மகன் ஆவார். இந்த நிலையில் சுரேஷ் தனது செலவுக்கு பணம் வேண்டும் என்று ராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமறுத்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு மீண்டும் ராணியிடம் சென்று அவர் பணம் கேட்டு தகராறு செய்தார். 

    அப்போது அவர் பணம் தரமறுத்ததால் ஆத்திரத்தில் சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராணியின் கழுத்தில் வெட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ராணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் சம்பவ இடத்திலேயே ராணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே வீடு கட்ட பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே உள்ள வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 55) கூலி தொழிலாளி.

    இவருக்கு அமரா(48) என்ற மனைவியும், சத்யா (30) என்ற மகளும், முருகன்(28), ஞானமூர்த்தி (25), கேசவன் (19) உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனர்.

    இதில் கட்டிட மேஸ்திரியான முருகன் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி வருகிறார். கட்டுமான செலவு அதிகரித்து விட்டதால் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தந்தையிடம் சென்று பணம் கேட்டுள்ளார்.

    அப்போது தந்தை மகனுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னிடம் பணம் இல்லை என்றும், இருந்தாலும் கொடுக்க முடியாது என்றும் தந்தை சரவணன் மறுத்து உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் கோபத்தில் தன்னுடைய தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்த சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரவணன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
    ×