என் மலர்
நீங்கள் தேடியது "Money Scam"
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
- இருவரையும் கைது செய்து போலீசார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அலங்காநல்லூர்:
சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நடந்த நண்பரின் திருமணத்தில் ராம்பாலாஜி பங்கேற்றார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த வித்யாஸ்ரீ (31) என்ற பெண்ணிடம் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.
தானும் கணவருடன் விவாகரத்து பெற்று 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக ராம் பாலாஜியிடம், வித்யாஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாம் இருவரும் 2-வது திருமணம் செய்து கொள்ளலாம் என வித்யாஸ்ரீ, ராம்பாலாஜியுடன் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்கு அவர் சம்மதமும் தெரிவித்தார். இதை பயன்படுத்தி அவரிடம் வித்யாஸ்ரீ அவ்வப்போது பணம் கேட்டுள்ளார்.
இதன் காரணமாக ராம்பாலாஜி, வித்யாஸ்ரீயின் வங்கி கணக்கில் சிறிது சிறிதாக ரூ.50 லட்சம் வரை பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் நேரில் சந்திக்கும்போது வித்யாஸ்ரீக்கு நகைகளையும் கொடுத்துள்ளார்.
பின்னர் திருமணம் குறித்து பேசும்போது வித்யாஸ்ரீ காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வித்யாஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரித்த போது வித்யாஸ்ரீ வாடகை வீட்டையும் காலி செய்து தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதனால் ராம் பாலாஜி அதிர்ச்சி அடைந்தார்.
தன்னிடம் ரூ. 50 லட்சம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்த வித்யாஸ்ரீ குறித்து அலங்காநல்லூர் போலீசில் ராம்பாலாஜி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரூ.50 லட்சம், நகை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அஜித் குமாரும் இருந்துள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தனிநபர் கடன் பெற 228 வரைவு காசோலைகள் மற்றும் பணமாகவும் பெற்றோம்.
- எங்கள் பகுதி மக்கள் எங்களை நம்பி கடன் பெறுவதற்காக பணம் தந்தார்கள்.
நாகர்கோவில்:
விளவங்கோடு கோணத்துவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
வேர்கிளம்பி சந்திப்பில் இயங்கி வரும் ஒரு நிதி நிறுவனத்தில் நான் கிளை பொறுப்பாளராக இருந்து வருகிறேன். எங்கள் நிறுவனத்தில் 20 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். எங்களை இந்த நிறுவனத்தில் தலைமை பொறுப்பாளராக இருக்கும் 4 பேர் சேர்ந்து பணி நியமனம் செய்தார்கள். நாங்கள் பணிக்கு சேர்ந்து 45 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் நிதி நிறுவனம் மூலமாக தனி நபர்கள் மற்றும் சுய உதவிக்குழு பெண்களிடம் கடன் உதவி வழங்க முடிவு எடுத்து இருப்பதாக நிறுவன பொறுப்பாளர்கள் எங்களி டம் கூறினர்.
தகுதி வாய்ந்த நபர்களி டம் ஆதார் கார்டு, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பேங்க் பாஸ்புக், ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சொந்த வீட்டு வரி ரசீது ஆகியவற்றை ஆவணங்களாக பெற்றுக் கொண்டு ரூ.1 லட்சம் கடன் பெற விரும்புபவர்களிடம் ரூ.5 ஆயிரத்தை வங்கி வரைவு காசோலையாக எடுக்கவும், இல்லை எனில் நேரடியாக பணம் வாங்கவும் எங்களிடம் கூறினார்கள்.
அதன்பேரில் தனிநபர் கடன் பெற 228 வரைவு காசோலைகள் மற்றும் பணமாகவும் பெற்றோம். மேலும் பெண்கள் சுய உதவிக்குழு கடன்பெற 68 குழுக்களுக்கும் உரிய தொகையை நிதி நிறுவனத்தின் தலைமை விசாரணை மேலாளரிடம் வழங்கினோம்.
நாங்கள் பணம் வசூலித்து கொடுத்த அனைத்து நபர்களுக்கும் கடன் வழங்குவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நிதி நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர்கள் 4 பேரையும் நாங்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் படித்து வேலையில்லாமல் குடும்பங்களை காப்பாற்றும் நோக்கில் சுவரொட்டிகளை பார்த்தும், விளம்பரங்களை பார்த்தும் இந்த நிதி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தோம். அந்த நிறுவனம் கூறியது போல எங்கள் பகுதி மக்கள் எங்களை நம்பி கடன் பெறுவதற்காக பணம் தந்தார்கள். நாங்கள் அந்த பணத்தை தலைமை நிர்வாகத்தை நம்பி ஒப்படைத்தோம். அந்த வகையில் சுமார் 3 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளோம்.
ஆனால் நிதி நிறுவன தலைமை பொறுப்பாளர்கள் 4 பேரும் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு கடன் தராமல் மோசடி செய்துவிட்டார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனு அளிக்க வந்தவருடன், மேலும் சில ஊழியர்களும், பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் வந்திருந்தனர். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலு வலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- நுழைவு வாயிலில் உள்ள கேமிராவில் அந்த நபர் உருவம் பதிவானது தெரியவந்தது.
- சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 32), கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் கேட்டார். ஆனால் கடன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவரது செல்போனுக்கு பேசிய நபர் சேலம் 5 ரோட்டில் இருந்து பேசுவதாகவும், இங்குள்ள பைனான்சில் 50 லட்சம் வரை கடன் பெற்று தருவதாகவும் கூறினார். மேலும் 50 லட்சம் கடனுக்கு 3 லட்சம் ரூபாய் பத்திரம் ஆவணங்கள் வழங்க வேண்டும், சேலம் கலெக்டர் அலுலலகத்தில் உள்ள கருவூலத்தில் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதனை உண்மை என நம்பிய கதிரேசன் 3 லட்சம் பணத்துடன் சேலம் கலெக்டர் அலுலவலகத்திற்கு வந்தார். பணத்தை வாங்கி கொண்டு கருவூலத்திற்கு சென்ற அந்த நபர் திரும்பி வரவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த கதிரேசன் இது குறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து போலீசார் அங்குள்ள கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நுழைவு வாயிலில் உள்ள கேமிராவில் அந்த நபர் உருவம் பதிவானது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- லோகநாதனிடம் முனிராஜ் பணம் இருந்தால் கொடுங்கள் அந்த பணத்தை இருமடங்காக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
- புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்கு பதிவு 2 பேரை கைது செய்தனர்.
ராயக்கோட்டை:
கோவை மாவட்டம், சவுரிபாளையம் வி.ஒ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது56). விவசாயி.
இவருடைய நண்பர் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மல்லூப்பட்டி பகுதியை சேர்ந்த முனிராஜ் இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் லோகநாதனிடம் முனிராஜ் பணம் இருந்தால் கொடுங்கள் அந்த பணத்தை இருமடங்காக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் அருகே முனிராஜ் நண்பர்களுடன் காரில் வந்து பணத்தை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் பணத்தை வாங்கிகொண்டு இது நாள்வரையிலும் எவ்வித பணமும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளதை அடுத்து பணத்தை லோகநாதன் திருப்பி கேட்டுள்ளார்.
அதற்கு முனிராஜ் பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து ராயக்கோட்டை போலீசில் லோகநாதன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து முனிராஜ் நண்பர்களான பாலக்கோட்டை சேர்ந்த சக்திவேல் (26), ஜக்கசமுத்திரம் தமிழரசன் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
- தொந்தரவு கொடுத்தால் நானும், எனது குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி எனக்கு மிரட்டல் விடுத்தார்.
- போத்தனூர் போலீசார் பெண் மீது மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
குனியமுத்தூர்:
மும்பை செம்பூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 44). இவர் கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நான் மும்பையில்சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு நான் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக கோவைக்கு வந்தேன்.
அப்போது எனது உறவினர் மூலம் கோவை போத்தனூரை சேர்ந்த ஹசல் ஜேம்ஸ் என்ற பெண் அறிமுகமானார். இருவரும் செல்போனை பரிமாறி கொண்டு அடிக்கடி பேசி வந்தோம்.
அப்போது அந்த பெண், தனது கணவர் இறந்துவிட்டார் எனவும், 2 குழந்தைகளை வைத்து கொண்டு தான் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனக்கு நீங்கள் உதவ வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். நானும் அதனை நம்பி அவருக்கு 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.90 ஆயிரம் பணம், துணிமணிகள், காலணிகள், செல்போன், கார் வாங்கி கொடுத்துள்ளேன். இதன் மதிப்பு மொத்தம் ரூ.20 லட்சம் ஆகும்.
இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் இறக்கவில்லை என்பதும், அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்வதும் எனக்கு தெரியவந்தது. மேலும் பெண்ணுக்கு வேறு சில நபர்களுடன் பழக்கம் இருப்பதை நான் அறிந்தேன்.
இதுகுறித்து நான் அவரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல் இருந்தார். தொடர்ந்து வற்புறுத்தி கேட்கவே கணவர் இருப்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நான் அவருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.
அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. மாறாக எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால் நானும், எனது குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி எனக்கு மிரட்டல் விடுத்தார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நான் தற்போது புகார் அளித்துள்ளேன். எனவே அந்த பெண் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தருமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் பெண் மீது மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பெண்ணை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2014ம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக என்னிடம் இருந்து ரூ.25 லட்சம் பணம் வாங்கினார்.
- பணத்தை எல்லாம் உனக்கு திருப்பித் தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என மிரட்டுகிறார்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 46). பனியன் நிறுவன உரிமையாளர். இவர் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனக்கும் சென்னையை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவருக்கும் 15வருடம் பழக்கம். எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கும் என் மனைவிக்கும் அவ்வப்போது சிறு சிறு குடும்ப பிரச்சனைகள் இருந்து வந்தது. எனது மனைவி என்னை பிரிந்து எனது பாட்டி வீடான அவிநாசிபாளையம் தோட்டத்தில் பாட்டி மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
2016ம் ஆண்டு என்னுடைய கட்டிடம் ஒன்றை விற்பனை செய்து 60 லட்சம் ரூபாய் ரொக்கமாக கையில் வைத்திருந்தேன். என் மனைவியுடன் என்னை சேர்த்து வைக்க கிருஷ்ணராஜ் அவ்வப்போது தோட்டத்திற்கு சென்று எனது பாட்டியுடனும் எனது மனைவியுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.
பின்பு என்னிடம் பேசிய கிருஷ்ணராஜ், உங்களதுதோட்டத்திற்கு நான் சென்ற பொழுது எனக்கு ஒரு வைப்ரேஷன் வந்தது. உங்கள் தோட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் உள்ளது. அந்தபுதையலை சில பூஜைகள் செய்தால் எடுக்கலாம். மேலும் தோட்டத்தில் புதையல் உள்ளவரை நீயும் உன் மனைவியும் சேர்ந்து வாழ முடியாது.
அந்த புதையலை எடுத்துவிட்டால் நீயும் உன் மனைவியும் கடைசி வரை வாழலாம். யாரும் உங்களை பிரிக்க முடியாது என்று கூறினார். இதனை நான் உண்மை என்று நம்பினேன். இதையடுத்து கிருஷ்ணராஜ், புதையல் எடுப்பதற்காக கடந்த 2014ம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக என்னிடம் இருந்து ரூ.25 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் புதையலையும் எடுக்க வில்லை. என் மனைவியுடன் என்னை சேர்த்தும் வைக்கவில்லை.
இது சம்பந்தமாக நான் பலமுறை கிருஷ்ணராஜை தொடர்பு கொண்டபோது பணத்தை எல்லாம் உனக்கு திருப்பித் தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என மிரட்டுகிறார். மேலும் என்னுடைய மனைவி வேறொருவருடன் தகாத உறவில் இருப்பதாக வீடியோ ஒன்றை மார்பிங் செய்து என்னிடம் காண்பித்தார். அதிர்ச்சி அடைந்த நான் ஏன் இப்படி செய்தாய் என்று கிருஷ்ணராஜிடம் கேட்டபோது நான் அப்படித்தான் செய்வேன். உன் குடும்பம் பாரம்பரியமான குடும்பம். நீ என்னிடம் கொடுத்த 25 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தருமாறு கேட்டு க்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
- ஒருகட்டத்தில் பரிசுத் தொகையும், பரிசுப் பொருட்களும் வராமல் போகவே, தான் ஏமாந்தது தெரிய வந்தது.
- மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
'ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவரது ஆசையை தூண்ட வேண்டும்...'
இது இயக்குனர் வினோத் இயக்கி, நடராஜ் நடித்து வெளியான திரைப்படத்தில் வெளியான ஒரு வசனம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சம் இருக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையிலான மோசடிகளும், சம்பவங்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகிக்கொண்டே செல்கிறது.
காவல் துறையில் எத்தனையோ பிரிவுகள் இருந்தாலும், தற்போது முழு செயல்பாட்டில் எப்போதும் பிஸியாக இருப்பது சைபர் கிரைம் போலீசார்தான். அந்த அளவுக்கு ஒயிட் காலர் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துவிட்டன.
அரசு வேலை வாங்கி தருகிறேன், நான் வங்கி மேலாளர் பேசுகிறேன், உங்களுக்கு மிகப்பெரிய பரிசு விழுந்திருக்கிறது, நீங்கள்தான் நாங்கள் தேடும் அதிர்ஷ்டசாலி... என்று பேசத்தொடங்கும் மோசடிக்காரர்களிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களை மயக்கி உங்களிடம் இருக்கும் பணத்தை அபகரித்துவிடுவார்கள் என்று சைபர் கிரைம் போலீசாரும் தொடர்ந்து எச்சரித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தியபோதும், மெத்தப் படித்தவர்களே இதில் அதிகம் மாட்டிக்கொள்கிறார்கள். அவ்வாறு சிக்கியவர்களில் டாக்டர்களும், என்ஜினீயர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் அரியலூரை சேர்ந்த அபலைப்பெண் ஒருவர் ரூ.12 லட்சத்தை இழந்துள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:-
அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தாய் ஜெயந்தி, தந்தை செல்வராஜ். செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர்களால் புற்றுநோய்க்கு மிகப்பெரிய மருத்துவம் பார்க்க தொகையின்றி தற்போது வீட்டில் வைத்தே மருந்து, மாத்திரைகளை வாங்கி கொடுத்து கவனித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜெயந்தியின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் ஆங்கிலத்தில் ஒரு இளம்பெண் குரல் ஒலித்தது. ஏதோ தவறான அழைப்பாக இருக்கும் என்று எண்ணிய ஜெயந்தி அதனை தவிர்த்துவிட்டார்.
ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த அழைப்பால் தனது மகனின் உதவியுடன் அந்த அழைப்பை ஏற்று பேசிய ஜெயந்திக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து நாட்டில் இருந்து பேசுகிறேன் என்று தன்னை அறிமுகப்படுத்திய அந்த பெண், தன்னுடைய மகள் பிறந்தநாளை முன்னிட்டு உங்களுக்கு பரிசு தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்க விரும்புகிறோம். அந்த அதிர்ஷ்டசாலியாக நீங்கள் தேர்வாகி உள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த பரிசுத் தொகையும், பரிசு பொருட்களும் தற்போது விமான நிலையத்தில் உள்ளது எனவும், அதனை பெற ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். அதற்காக முதலில் ரூ.35 ஆயிரம் வேண்டும் எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் பரிசுத்தொகை என்பதால் பல லட்சங்கள் இருக்கும், தங்கள் குடும்ப பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும், தனது கணவரையும் புற்றுநோயில் இருந்து காப்பாற்றி விடலாம் என்று கணக்கு போட்ட ஜெயந்தி தனது மகன் உதவியுடன் ரூ.35 ஆயிரத்தை வங்கியில் செலுத்தியுள்ளார்.
பின்னர் அவர்கள் வருமான வரி, சுங்கக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி 1 லட்சம், 2 லட்சம் என கொஞ்சம் கொஞ்சமாக ரூ.12 லட்சம் கறந்துள்ளனர். ஆனாலும் பரிசுத்தொகையோ, பரிசு பொருட்களோ வந்தபாடில்லை. இதற்கு மேல் கடன் வாங்க கூட வழியில்லை என்ற நிலைக்கு ஜெயந்தி வந்தார்.
அக்கம், பக்கத்தினர், உற்றார், உறவினர்கள் என கடன் வாங்காத ஆளே இல்லை. அப்போதுதான் ஆரம்பத்திலேயே உதிக்க வேண்டிய சிந்தனை தற்போது ஜெயந்திக்கு உதித்தது. ஒருவேளை இது ஏமாற்று வேலையாக இருக்குமோ என்று எண்ணினார்.
ஒருகட்டத்தில் பரிசுத் தொகையும், பரிசுப் பொருட்களும் வராமல் போகவே, தான் ஏமாந்தது தெரிய வந்தது. இழந்தது போதும், இனியாவது விழித்துக்கொள்வோம் என்று கருதிய ஜெயந்தியும், அவரது மகன் விமல்ராஜூம் நடந்தது குறித்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்தை இழந்து பரிதவித்து வரும் ஜெயந்தி இந்த மோசடி பற்றி கூறுகையில், வெளிநாட்டிலிருந்து கூரியர் வந்திருக்குன்னு சொல்லி முதலில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதன்படி முதல் கட்டமாக வரி செலுத்த ரூ.35 ஆயிரம் அனுப்புமாறு கூறினார்கள். அப்படியே படிப்படியா ரூ.12 லட்சத்து 35 ஆயிரம் அனுப்பினோம். எல்லாம் கிடைக்கும்ங்குற நம்பிக்கையில் அக்கம் பக்கத்துல கடன் வாங்கித் தான் கொடுத்தோம் என்றார்.
- சீட்டுப்பணத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்கள்.
- கடந்த 3 ஆண்டுகளாக சீட்டு பணம் மற்றும் தீபாவளி பண்டு என பலர் ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் செலுத்தி உள்ளோம்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயமாலினி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் நேரில் வருகை தந்தனர். பின்னர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அனைவரும் புதுப்பாளையத்தை சேர்ந்த துணி சலவை கடையில் கூலி வேலை செய்து வருகின்றோம். கடந்த 2018-ம் ஆண்டு கடலூர் புதுப்பாளையம் மற்றும் வன்னியர் பாளையம் சேர்ந்த 2 நபர்கள் எங்களை அணுகி வங்கி மற்றும் தபால் துறையில் முதலீடு செய்யலாம். எங்களுக்கு தெரிந்த நபர்கள் சீட்டு நடத்தி வருகின்றனர். மாதந்தோறும் தீபாவளி பண்டும் நடத்தி வருகிறார். ஆகையால் சீட்டுப்பணத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்கள்.
மேலும் சீட்டு எடுத்தவுடன் உடனடியாக பணம் வழங்கி விடுவோம். தீபாவளி சீட்டு கட்டினால் 20 நாட்களுக்கு முன்பு பொருட்கள், தங்க நாணயம் ஆகியவை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை நம்பி கடந்த 3 ஆண்டுகளாக சீட்டு பணம் மற்றும் தீபாவளி பண்டு என பலர் ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் செலுத்தி உள்ளோம்.
அவர்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால், பணம் தராமல் ஏமாற்றி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக உள்ளனர். மேற்கண்ட நபர்கள் குறித்து விசாரித்த போது சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த கும்பல் பல்வேறு இடங்களில் பணத்தை ஏமாற்றி வீடு மற்றும் நிலம் வாங்கியுள்ளதும், கண்டெய்னர்கள் வாங்கி உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டால் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆகையால் ரூ.1 கோடி 40 லட்சம் ஏமாற்றிய நபர்களை உடனடியாக கண்டுபிடித்து எங்கள் பணத்தை மீட்டுத் தந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் அதிக பணத்தை வசூல் செய்தனர்.
- மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மரியச் செல்வி. இவர்களது மகன்கள் சகாய பாரத், ஆரோக்கிய அருண், இருதய ராஜ்.
இவர்களில் சகாய பாரத் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். ஆரோக்கிய அருண் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து போலீசாக உள்ளார். இருதயராஜ் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் அதிக பணத்தை வசூல் செய்தனர். மேலும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது, பெரும் நிறுவனங்களின் விற்பனை உரிமம் எடுப்பது, மற்றும் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதுவரை சுமார் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.
ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை கொடுக்காததால் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கட்டிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ் சகோதரர்களான சகாயபாரத், ஆரோக்கிய அருண் ஆகியோர் குடும்பத்துடன் சேர்ந்து ரூ.40 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து ஜோசப், அவரது மனைவி மரிய செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத் அவரது மனைவி சமியா உள்ளிட்ட8 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி நிதி மோசடி செய்த வழக்கில் போலீஸ் சகோதரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு அவர்களிடம் போலீசார் உட்பட ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்து இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சைபர் கிரைம் குற்றவாளிகள் நாள்தோறும் தங்களது குற்றத்தின் வகைகளை மாற்றிக் கொண்டு புது யுக்திகளை கையாண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.
- அமேசான் இலச்சினையோடு இருக்கும் அந்த கடிதத்தில் ஸ்மார்ட் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஸ்மார்ட் போன், மடி கணினி, ரொக்க பணம் ஆகியவை பரிசாக விழுந்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கும்.
சென்னை:
பரிசு கூப்பன் பணம் மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சைபர் கிரைம் குற்றவாளிகள் நாள்தோறும் தங்களது குற்றத்தின் வகைகளை மாற்றிக் கொண்டு புது யுக்திகளை கையாண்டு மோசடியில் ஈடுபடுகின்ற னர். தற்போது அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பரிசு போட்டி நடத்தியதாகவும், அதில் நீங்கள் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கடிதம் வீட்டுக்கு அனுப்பப்படுகிறது.
அமேசான் இலச்சினையோடு இருக்கும் அந்த கடிதத்தில் ஸ்மார்ட் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஸ்மார்ட் போன், மடி கணினி, ரொக்க பணம் ஆகியவை பரிசாக விழுந்தி ருப்பதாக குறிப்பிட்டு இருக்கும். மேலும் அந்த கடிதத்துடன் ஒரு ஸ்கிராட்ச் கூப்பன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த கூப்பனை ஸ்கிராட்ச் செய்து அதில் உள்ள குறியீடுகளை அதில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப் பட்டிருக்கும். அதை நம்பி பொதுமக்கள் அந்த கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் போது எதிர்முனையில் பேசும் நபர், பரிசு பொருட்களை அனுப்புவதற்கு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு வரிகள் செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள். இதை நம்பிய பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்துவார்கள்.ஆனால் பணத்தை பெறும் நபர், கைப்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு தொடர்பை துண்டித்து விடுவார். இதன் பின்னரே பணம் செலுத்திய பொது மக்களுக்கு தங்களிடம் பணம் மோசடி செய்யப் பட்டிருப்பது தெரியவரும்.
எனவே இது போன்ற மோசடிகளில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள எச்ச ரிக்கையுடனும், விழிப்புடனும், இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ரூ.1 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்றும், பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
- பணத்தை இழந்த பலர் ஏற்கனவே சந்திரசேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
போரூர்:
சென்னை வானகரம் மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரசேகர் (வயது 45). இவர் நிதி நிறுவனம் நடத்தி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் தொழில் நடத்தி வந்தார்.
இவர் தனது நிதி நிறுவனத்துக்காக சென்னையில் 5 இடங்களில் அலுவலகங்களையும் தொடங்கினார். அதில் அலுவலர்களை வேலையில் வைத்து, கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டினார். மேலும் ரூ.1 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்றும், பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதை உண்மை என்று நம்பிய பொதுமக்கள் பலர் சந்திரசேகரின் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். இதனால் அவரிடம் கோடி கோடியாக பணம் குவிந்தது.
அதை வைத்து குறிப்பிட்ட காலம் மட்டும் ரூ.1 லட்சம் கட்டியவர்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் கொடுத்தார். சில மாதங்கள் கழித்து சிலருக்கு பணத்தை கொடுக்கவில்லை.
இதையடுத்து பொது மக்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை அவரிடம் கேட்டனர். ஆனால் அவர் முதலீடு செய்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக அவர் பொதுமக்களிடம் பணம் பெற்று ரூ.100 கோடி மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனால் பணத்தை இழந்த பலர் ஏற்கனவே சந்திரசேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
வழக்கில் சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு சந்திரசேகர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
சந்திரசேகர் கைது செய்யப்பட்ட பிறகு சென்னையில் அவர் நடத்திய நிதி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பணம் கட்டி ஏமாந்தவர்கள் அவரிடம் இருந்து பணத்தை எப்படி திரும்ப பெறுவது என்பது தெரியாமல் தவித்தனர்.
இந்நிலையில் சந்திரசேகர் சென்னை வானகரத்தில் உள்ள வீட்டுக்கு வந்திருப்பதாக தகவல் பரவியது. இதனால் பணம் கட்டி ஏமாந்த பெண்கள், பட்டதாரிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை வானகரத்தில் உள்ள சந்திரசேகரின் வீட்டு முன்பு குவிந்தனர். திடீரென்று அவர்கள் சந்திரசேகரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சந்திரசேகரின் வீட்டின் அருகில் வசித்தவர்கள் சந்திரசேகர் வீட்டை பூட்டி விட்டு ஏற்கனவே தலைமறைவாகிவிட்டார் என்று தெரிவித்தனர். ஆனாலும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.
இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும் மோசடி செய்த தொகை ரூ.100 கோடி என்பதால் இந்த வழக்கு ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே சந்திரசேகர் வசிக்கும் பகுதியில் அவரது வீட்டை சுற்றி போஸ்டர் ஒட்டப்பட் டுள்ளது. அதில், "நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த நிறுவனர் சந்திரசேகர், மக்களிடம் சுருட்டிய பணத்தை திருப்பி கொடு, எங்களுக்கு தண்ணீர் காட்டாதே... ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..." என்று கூறப்பட்டு இருந்தது.
- ஏ.ஐ. மூலம் பிரபலங்களின் புகைப்படங்களை கற்பனை செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
- செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஜெனிபர் மகள் போல பேசி அவரிடம் மோசடிக்கு முயன்றதும் தெரியவந்தது.
சமீப காலமாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் புகைப்படங்களை கற்பனை செய்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்த செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஒரு பெண்ணிடம் ரூ.8¼ கோடி மோசடி முயற்சி நடந்த சம்பவம் அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அங்குள்ள அரிசோனா பகுதியை சேர்ந்த ஜெனிபர் டெஸ்டெபனோ என்ற பெண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்புறம் அவரது 15 வயது மகள் அழும் குரல் கேட்டது. உடனே ஜெனிபர் என்ன ஆனது என்று கேட்டதற்கு, நான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன் என கூறி அழதொடங்கினார். அப்போது ஜெனிபரின் மகள் பனி சறுக்கு விளையாட சென்றிருந்தார். இதனால் தனது மகள் ஏதோ ஆபத்தில் சிக்கி கொண்டார் என நினைத்த ஜெனிபர் அதிர்ச்சியடைந்தார்.
அப்போது ஒரு ஆண், ஜெனிபரின் மகளை மிரட்டல் குரல் கேட்டது. பின்னர் ஜெனிபரிடம் பேசிய அந்த நபர் உனது மகளை கடத்திவிட்டோம். ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8¼ கோடி ரூபாய்) கொடுத்தால் விட்டு விடுகிறோம் என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெனிபர் தனது மகளின் தோழியின் அம்மாவை தொடர்பு கொண்டு பேசினார்.
பின்னர் அவர் மூலம் போலீஸ் உதவியை நாடிய போது ஜெனிபரின் மகளை யாரும் கடத்தவில்லை என்பதும், செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஜெனிபர் மகள் போல பேசி அவரிடம் மோசடிக்கு முயன்றதும் தெரியவந்தது. எனினும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.