search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monitoring Room"

    • உடனடியாக தகவல் தெரிவிக்க செய்ய, இ.எஸ்.எம்.எஸ்., என்ற இணையபதிவு தொடங்கப்பட்டுள்ளது.
    • வீடியோ பதிவு செய்பவருடன், வாகனங்களில் உள்ள கேமராவில் பதிவாவதை, கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ எடுக்கும் குழு, பார்க்கும் குழு, கணக்கியல் குழு ஆகிய வற்றிற்கு தலா 48 என 192 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 496 பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், ரிப்பன் மாளிகையில் நடந்தது. அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநகராட்சி கூடுதல் கமிஷனரும், மாவட்ட தேர்தல் கூடுதல் அலுவலருமான லலிதா விளக்கினர்.

    தேர்தலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து வரப்பட்டால், உடனடியாக தகவல் தெரிவிக்க செய்ய, இ.எஸ்.எம்.எஸ்., என்ற இணையபதிவு தொடங்கப்பட்டுள்ளது.

    அதேபோல் ஒவ்வொரு வாகனங்களிலும் புதிதாக, 'கண்காணிப்பு கேமரா' பொருத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக, வீடியோ பதிவு செய்பவருடன், வாகனங்களில் உள்ள கேமராவில் பதிவாவதை, கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.

    பணியில் ஈடுபடுவோருக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், சோதனை பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×