search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Morattupalayam"

    • இக்கல் குவாரி அமையவுள்ள இடத்துக்கு 300 மீட்டா் சுற்றளவில் குடியிருப்புகள் இல்லை என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கொடுமணல் அகழ்வாய்வு கூடம், விஜயமங்கலம் சமணா் கோயில்கள் ஆகியவை இருப்பதை அறிக்கையில் மறைத்துள்ளதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளா்கள் மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுப்பாளையத்தில் தனியாா் கல் குவாரி மற்றும் கிராவல் குவாரி அமைப்பது தொடா்பான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இக்கல் குவாரி அமையவுள்ள இடத்துக்கு 300 மீட்டா் சுற்றளவில்கு டியிருப்புகள் இல்லை என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் குவாரி அமையவுள்ள இடத்தில் இருந்து 300 மீட்டா் தொலைவுக்குள் 15 வீடுகள் உள்ளன.மேலும், 15 கிலோ மீட்டா் சுற்றளவில் அகழ்வாய்வு இடங்கள், தொல்லியல் சின்னங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொடுமணல் அகழ்வாய்வு இடம், விஜயமங்கலம் சமணா் கோயில்கள் ஆகியவை இருப்பதை அறிக்கையில் மறைத்துள்ளதாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளா்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

    மேலும்இந்தப் பகுதியில் கல் குவாரி அமைக்கக் கூடாது என்று எதிா்ப்பு தெரிவித்தனா்.இதையடுத்து, கல் குவாரி அமைப்பது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆய்வு நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்தாா்.கூட்டத்தில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் சரவணகுமாா், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், சூழலியல் செயல்பாட்டாளா் பாரதி, ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    ×