search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mudalirayaswamy Temple"

    • கும்பாபிஷேக விழா வருகிற 8-ந் தேதி காலை 5மணி முதல் 6 மணிக்குள் நடக்கிறது.
    • ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்த ஊதியூர் முதலிப்பாளையத்தில் முதலிராயசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு விநாயகர், பொன்திருமலாயி, கன்னிமார்சாமி, கருப்பராயசாமி , ஸ்ரீ அண்ணமார் சுவாமி மற்றும் பரிவார சுவாமிகள் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 5மணி முதல் 6 மணிக்குள் நடக்கிறது.

    கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகத்தின் செம்பூத்த மற்றும் ஆந்தை குலத்தவர்களின் குலதெய்வங்களாக விளங்கி வரும் இக்கோவில்களின் விழாவுக்கு சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணியம், இளைய பட்டக்காரர் எஸ்.கே. கணேஷ் முன்னிலை வகிக்கின்றனர்.

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், ஈரோடு எம். பி. கணேசமூர்த்தி, திருப்பணி பிரமுகர்களான கரட்டுப்பாளையம் சின்னசாமி, திருப்பூர் ஏ. ஆர். சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், வரன்பாளையம் திருநாவுக்கரசர், மடாதிபதி மெளன சிவாசல அடிகள் ஆகியோர் அருளாசி வழங்குகின்றனர். ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    முன்னதாக தீபாராதனை , மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோபுர கலசம் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆந்தை குலத்தவர்கள்,திருப்பணி குழுவினர், முதலிபாளையம் ஊர் பொதுமக்கள், அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர். 

    ×