search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muttur Municipality"

    • விழாவிற்கு தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசன் தலைமை தாங்கினார்
    • உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட செங்கோடம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, நகப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி ஆகியவற்றில் ஊராட்சி ஒன்றிய சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் என மொத்தம் ரூ.14 லட்சத்து 86 ஆயிரத்தில் இருப்பு அறையுடன் கூடிய புதிய சமையலறை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.

    மேலும் மோளக்கவுண்டன்புதூரில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் ரூ.20 லட்சத்திலும், ஊடையத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்திலும், தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் குழாய்கள் விஸ்தரிப்பு செய்யப்பட உள்ளது.

    இதன்படி இப்பகுதிகளில் மொத்தம் ரூ.46 லட்சத்து 86 ஆயிரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசன் தலைமை தாங்கினார். முத்தூர் பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணைத் தலைவர் மு.க.அப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய சமையலறை கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கான பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தார்.

    விழாவில் வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், முத்தூர் பேரூர் செயலாளர் செண்பகம்பாலு, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜ், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன், ராகவேந்திரன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 1150 குடியிருப்புகளில் வசிக்கும் 4700 நபர்களுக்குநாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சி பொறியாளர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், முத்தூர்பேரூராட்சி, மகாலட்சுமி நகரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம்மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவி ல்நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அமைச்சர் கூறியதாவது:-

    வெள்ளகோவில் நகராட்சியில் 2022-23ம் ஆண்டு அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டு தீத்தாம்பாளையம் மற்றும் தண்ணீர்பந்தல் ஆகிய பகுதியில் 1 லட்சம்கொள்ளளவு கொண்ட மேல்நிலை த்தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தமேல்நிலைத் தொட்டியிலிருந்து சுமார் 1150 குடியிருப்புகளில் வசிக்கும் 4700 நபர்களுக்குநாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முத்தூர் பேரூராட்சி மகாலட்சுமி நகரில்மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர்பூ ங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்தீர்த்தாம்பா ளையம் மற்றும் தண்ணீர் பந்தலில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தேன் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர்குமரேசன்,வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சி பொறியாளர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×