search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysteries"

    • சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் அவரது வாகனம் புறப்பட இருந்தது.
    • சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு டான் சபாவில் வாகனத்தில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் அவரது வாகனம் புறப்பட இருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை தாண்டி திடீரென சந்திரபாபு நாயுடுவின் பிரசார வாகனத்தில் மீது ஏறினர்.

    இதனைக்கண்ட பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிரே காரை நிறுத்தினார்.
    • பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 42). இவர் தனது காரில் மனைவி சூரியசந்திரகலா மற்றும் குழந்தையுடன் திருப்பதிக்கு சென்றார். மீண்டும் திருப்பதியில் இருந்து திண்டிவனம் வந்தார். திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிரே காரை நிறுத்தினார். காரிலேயே குழந்தையின் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை வைத்துவிட்டு ஓட்டலுக்குள் குடும்பத்துடன் சாப்பிட சென்றார்.

    சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து பார்த்த போது காரின் வலதுபுறம், பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரின் உள்ளே பார்த்த போது ஒரு பவுன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை காரின் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து காரின் கண்ணாடியை உடைத்து நகை, பணம், செல்போனை திருடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த வர் குப்புசாமி மகன்ஆறு முகம் ( வயது 53).

    இவர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி விடுதியில் வார்ட னாக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள தொண்ட ராம்பட்டுக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது .

    இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தெய்வேந்திரன்.

    இவரது மனைவி கோமளவல்லி (வயது 48).

    சம்பவத்தன்று காலையில் இவர் தனது பிள்ளையின் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த கோமளவல்லி உள்ளே சென்று பார்த்தார்.

    பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்த அவர் தஞ்சை தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பாம்பனில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது
    • பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அண்ணா நகரை சேர்ந்தவர் வில்வஜோதி (வயது32). இவர் கடந்த

    30-ந்தேதி தனது குடும்பத் துடன் சாயல்குடி அருகே ஆ.கரிசல்குளத்தில்உள்ள அரியநாச்சி அம்மன் கோவில் திருவிழாவிற்காக சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அறையின் அலமாரியின் மேல் ஒரு பையில் ைவக்கப்பட்டிருந்த 10 பவுன் கொண்ட டாலருடன் கூடிய தங்க மாலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இந்த நிலையில் திருவிழாவை முடித்து விட்டு ஊர் திரும்பிய வில்வஜோதி, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தங்க மாலை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து வில்வஜோதி கொடுத்த புகாரின்பேரில் பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து பணத்தை திருடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் டென்சிங்.

    இவர் பாப்பாநாட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார்.

    இந்நிலையில் வழக்கம் போல நேற்றிரவு பணிகளை முடித்துவிட்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள், பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன் மற்றும் பணத்தை திருடினர்.

    இவர்களின் சத்தம் கேட்டு எழுந்த ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து டென்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டுக்குள் மர்ம நபர்கள் இருப்பதை அறிந்து கத்தி கூச்சலிட்டார்.
    • பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் சாம் மரியலியானி.

    இவரது மனைவி அனிதா தனசீலி (வயது 35 ). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் கதவை பூட்டாமல் அருகே உள்ள வீட்டுக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட 2 பேர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடினர்.

    அப்போது வந்த அனிதா தனசீலி வீட்டுக்குள் மர்ம நபர்கள் இருப்பதை அறிந்து கத்தி கூச்சலிட்டார்.

    உடனடியாக அவர்கள் இரண்டு பேரும் பின் வாசல் வழியாக தப்பி ஓட முயன்றனர்.

    உடனடியாக பொதுமக்கள் திரண்டு விரட்டி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர் .

    தர்ம அடி கொடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த வேடப்பன் (வயது 55), பட்டுக்கோட்டை கீழப்பாளையத்தை சேர்ந்த விஜய் (34) என்பது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடி தப்பி ஓட முயன்ற வேடப்பன், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயம் அடைந்த வேடப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 பேர் ஒரு ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • மர்மந பர்கள் ஆட்டை சாலையில் விட்டுவிட்டு தப்பிவிட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் செல்லம்பட்டு கச்சிராயப்பாளையம் சாலையில் மர்ம நம்பர்கள் 2 பேர் ஒரு ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதனைப் பார்த்த ஒரு சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தினர். நீங்கள் யார், இந்த ஆடு யாருடையாது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காத மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பித்தனர். அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மந பர்கள் இதனை பார்த்து ஆட்டை சாலையில் விட்டுவிட்டு தப்பிவிட்டனர். மண்மலை கிராமத்தில் நள்ளிரவில் வரும் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டு, கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு ேபான்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மர்ம நபர்கள் 31/2 பவுன் தங்க நகை 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
    • தடாவிற்கு சென்று மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒலக்கூர் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட பல்வேறு பகுதி களில் தொடர்ந்து வீட்டில் வெளியே தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களை குறி வைத்து அவர்கள் வீடுகளுக்கு சென்று நகை, பணத்தை கொள்ளை யடிப்பது தொடர்கதை யாகவே இருந்து வந்தது. கடந்த 1-ந் தேதி கோனேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த பாபு வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 31/2 பவுன் தங்க நகை 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

    அதேபோல அன்னம் பாக்கம் கலையரசி, கம்பூர் வேலு, பாதிரி முரளி ஆகி யோர் வீட்டில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மர்ம நபர்கள் கொள்ளை யடித்துச் சென்றனர். இது குறித்து ஒலக்கூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கைரேகை மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் குற்றவாளி களை போலீசார் தேடிய நிலையில் இந்த 4 பேர் வீட்டிலும் கொள்ளை அடித்த நபர்கள் ஆந்திர மாநிலம் தடாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இைதயடுத்து ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் ஆன தனாசன், தலைமை காவலர் கணேசன் ஆகியோர் ஆந்திரா மாநிலம் தடாவில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதி யைச் சேர்ந்த சாரதி (20)மற்றும் வாழப்பட்டு பல்ல நிமிலி செய்யூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் தடாவிற்கு சென்று மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட 2 பேரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.சாரதி செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்படிப்பை2 ஆண்டு வரை படித்துவிட்டு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சூர்யாவிடம் சேர்ந்து குடித்துவிட்டு உல்லாசமாக ஆடம்பரமாக இருப்பதற் காக திருடியதும் விசார ணையில் தெரியவந்தது.

    • கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர்.
    • 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூரில் உள்ள அய்யனார் கோவில் உண்டியலுக்கு மர்மநபர்கள் கடந்த 3-ந்தேதி தீ வைத்தனர். இது தொடர்பான தகவலின் பேரில் கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்து அறநிலையத் துறையின் விழுப்புரம் உதவி ஆணையர் திவாகர், ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.

    அதில் எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நல்ல நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் பிரிக்கப்பட்டது. மேலும், நாணயங்களும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்து போயிருந்தது. மேலும், நல்ல நிலையில் இருந்த 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. கோவில் உண்டியலுக்குள் தீ வைத்து பக்தர்களின் காணிக்கைகளை எரித்த மர்மநபர்களை கிளியனூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியலுக்குள் தீப்பிடித்து எரிந்து புகை வந்ததை கண்டனர்.
    • இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூரில் புகழ்பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. நேற்று மாலை 5 மணியளவில் இக்கோவில் வளாகத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது. அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியலுக்குள் தீப்பிடித்து எரிந்து புகை வந்ததை கண்டனர். அவர்கள் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் கிளியனூர் போலீசார், தீயணைப்பு படையினர் கோவிலுக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருட முயற்சித்தது தெரியவந்தது. மேலும், உண்டியலை திறக்க முடியாததால், காகிதத்தில் தீ வைத்து உண்டியலுக்குள் போட்டிருக்கலாம் என போலீசாருக்கு தெரியவந்தது. இதில் உண்டியலுக்குள் இருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் தீயில் கருகியிருக்கலாம் எனவும், நாணயங்கள் மட்டுமே இருக்க வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து இந்து அறநிலையத் துறையின் திண்டிவனம் ஆய்வாளர் தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலுக்குள் தீ வைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.
    • வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நர்கள் 10 பட்டு புடவை, வெண்கல செம்புகளை திருடி சென்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர். இவர் நேற்று தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து இன்று காலை தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே பீரோவில் இருந்து 35 பவுன் நகை மற்றும் 21 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    இதைபோல் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் அப்பள கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வீட்டிலும் நேற்று இரவு வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நர்கள் 10 பட்டு புடவை, வெண்கல செம்புகளை திருடி சென்றனர். மேலும் இந்த வீட்டின் அருகே உள்ள மேஸ்திரி லட்சுமணன் என்பவர் வீட்டிலும் 2 பவுன் தங்க நகை, வீட்டு பத்திரத்தை திருடிச் சென்றனர். மேலும் பூக்கடை வியாபரி முத்து இவரது வீட்டிலும் 15 பவுன் நகை, 25 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டி யன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மோப்ப நாயும் வரவழக்கப் பட்டு துப்புதுலக்கப்பட்டு வருகிறது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். திண்டி வனத்தில் ஒரே நாளில் அதிமுக ெசயளாலர் வீடு உள்பட 4 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி யது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×