என் மலர்
நீங்கள் தேடியது "mystery"
- தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமம் கரட்டூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகில் ஓடும் சரப்பங்கா நதியில் இன்று காலை 6 மணியளவில் ஆண் உடல் ஒன்று மிதந்தது.
- இவர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து தனியாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார் என்பதும், இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளதும் தெரியவந்தது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமம் கரட்டூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகில் ஓடும் சரப்பங்கா நதியில் இன்று காலை 6 மணியளவில் ஆண் உடல் ஒன்று மிதந்தது.
இதை கண்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பாப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி கயிறு கட்டி உடலை மீட்டனர். தொடர்ந்து அவரது பேண்ட், சட்டையை சோதனை செய்ததில் அவரது பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையை கைப்பற்றினர்.
சேலத்தை சேர்ந்தவர்
விசாரணையில் அவர், சேலம் எருமாபாளையம், களரம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்ரமணி- வசந்தி தம்பதியரின் மகன் சங்கர் (வயது 38) என்பதும், திருமணம் ஆகாதவர் என்பதும் தெரியவந்தது. இவர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து தனியாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார் என்பதும், இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளதும் தெரியவந்தது.
சங்கர் பிணமாக மிதந்த இடத்தின் அருகில் அரசு மதுபான கடை உள்ளது. இதனால் சங்கர் மதுகுடிக்க வந்த இடத்தில் போதையில் தவறி ஆற்றில் விழுந்து விட்டாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து ஆற்றில் வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சங்கர் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
- இன்று காலை 8.30 மணி அளவில் ஹரிகரன் வேலை செய்து வந்த வெள்ளி பட்டறையில் பிணமாக கிடந்தார்.
- இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அன்னதானப்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி ராமயன் காடு பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர். இவரது மகன் ஹரிஹரன் என்கிற பிரவீன் (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவில் மேட்டில் உள்ள தனது மாமா வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் ஹரிகரன் வேலை செய்து வந்த வெள்ளி பட்டறையில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அன்னதானப்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிஹரன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஹரிஹரன் எப்படி இறந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மண்ணச்சநல்லூரில் தொடரும் மர்மம்
- மர்ம நபர்கள் வலைவீசி தேடல்
மண்ணச்சநல்லூர்,
மண்ணச்சநல்லூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மேலும் ஒரு மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள நேரு நகரைச் சேர்ந்த மலேசிய நாட்டில் என்ஜினியராக வேலை பார்த்து வரும் மணிகண்டன் (வயது 40) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துச்சென்றனர்.இதே பகுதியில் அதற்கு ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் மண்ணச்சநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் மகன் சதீஷ்குமார் (வயது 32) என்பவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் வீட்டில் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்து சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று மன்னச்சநல்லூர் இந்திரா நகரச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் ராஜதுரை வயது 38 என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மன்னச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி நடத்தினார் மேலும் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரித்துச் செல்லும் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றார் இந்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார்.
- நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 64). இவர், காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை பழனியம்மாள் குடி சையில் இருந்து வெளியில் வரவில்லை. இதையடுத்து, தீவனம் இன்றி கால்நடை களும் கத்தத் தொடங்கின. அதனைக்கேட்டு அப்பகுதி மக்கள் குடிசைக்கு சென்று பார்த்துள்ளனர்.
அங்கு, நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
பழனியம்மாளின் தலை யில் கல்லால் தாக்கியதில், அதிகளவில் ரத்தம் வெளி யேறிய நிலையில் உயிரி ழந்திருப்பது தெரியவந்தது. கொலை சம்பவம் குறித்து அறிந்த டி.எஸ்.பி. மகா லட்சுமி, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, கொலை நடந்த விதம் குறித்து விசா ரணை மேற்கொண்டார்.
நிர்வாண நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்ததை பார்க்கும் போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டடிருக்கலாம் என போலீசார் தெரிவித்த னர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான் முழுவிபரம் தெரிய வரம் என கூறினர். தொடர்ந்து மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. குடிசை வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய ஸ்டெபி, மெயின் ரோடு வரை சென்று நின்றுவிட்டது. மேலும், நாமக்கல்லில் இருந்து தடய அறிவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட எஸ்.பி.கலைச்செல்வன், சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளியை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டார்.
2 மாதங்களுக்கு முன்பு பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியைச் சேர்ந்த மூதாட்டி பாவாயம்மாள், பாப்பம்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் நிர்வணா நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இந்த வழக்கில் கொலையாளி குறித்து துப்பு துலங்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், அதேபோல் மற்றொரு கொலை சம்ப வம், பள்ளிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இரட்டை கொலையில் 5 மாதமாக துப்பு துலங்காத மர்மம் உள்ளது.
- குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணாங்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்-மகளை கொலை செய்து பேரனை கடுமையாக தாக்கி 60 பவுன் தங்க நகைகள் மற்றும் யவெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசா ரணை நடத்த வந்தபோது, இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து மற்ற வழக்குகள் போல் குற்றவாளிகளிம் இருந்து திருட்டு போன தங்க நகைகளை உருக்காமல் அப்படியே கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே உண்மை தன்மையை நாங்கள் அறிய முடியும் என கிராம மக்கள் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு அவர்கள் உறுதி அளித்ததால் இறந்தவர்க ளின் உடல்கள் மருத்துவ மனையில் இருந்து பெறப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க மோதிரம் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கைப்பற்றிய தாக தெரிவித்தனர். ஆனால் அந்த நகைகள் திருட்டுபோன நகைகள் இல்லை என்று கொலை செய்யப்பட்ட 2 பேரின் உறவினர்கள் தெரி வித்தனர்.
இந்த வழக்கில் துப்பு துலக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். ஆனால் தற்போது அவை 3 தனிப்படையாக குறைக்கப் பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்து 5 மாதங்கள் ஆகியும், திருட்டு போன நகைகள் கிடைத்தாதது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இந்தநிலையில் போலீசார் தற்போது விசாரணை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், குற்றவாளி களை இன்னும் சில நாட்க ளில் கைது செய்து விடு வோம் எயன்று தெரிவித்துள் ளனர்.
இந்த இரட்டை கொலை விசாரணையை தேவகோட்டையை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கவனித்து வருகின்றனர். எனவே விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது.
- மேலூர் அருகே மாயமான லாரி டிரைவர் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார்.
- போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது45). லாரி டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகி விட்டார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.
ஆனால் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது உறவினர்கள் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் நாவினிப்பட்டி அருகே உள்ள சின்ன ஆலங்குடி கோவில் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இறந்து கிடந்தார். அவர் சாலையோரம் பிணமாக கிடப்பதை இன்று அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.
அவர்கள் அதுபற்றி மேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாயமாகி தேடப்பட்டு வந்த நிலையில் நாகராஜன் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என்பதால், அதற்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
- முதியவர் மர்மமான முறையில் இறந்தார்.
- மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது64). இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் 2-வது திருமணம் செய்தார். கடந்த சில வருடங்களாக மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அருப்புக்கோட்டை அண்ணா சிலை அருகேயுள்ள குப்பை தொட்டி ஒன்றில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர் ராஜகோபாலின் மகன் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். முத்துக்குமார் அங்கு வந்து பார்த்தபோது ரத்த காயங்களுடன் ராஜகோபால் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார்த்திக் ராஜா (வயது 29). இவர் சங்ககிரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
- ந்தரேஸ்வரிக்கும், கார்த்திக் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் கிராமம் செம்மண் காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 29). இவர் சங்ககிரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கரேஸ்வரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. சமீபத்தில் அந்த குழந்தை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுந்த ரேஸ்வரிக்கும், கார்த்திக் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சுந்தரேஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எடப்பாடி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சுந்தரேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து சுந்தரேஸ்வரியின் பெற்றோர், பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் தங்களது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுந்தரேஸ்வ ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுந்தரேஸ்வரி இறந்த வழக்கில் உரிய விசாரணை நடைபெற வில்லை என்றும், அவரது உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவு கோரி உறவினர்கள் நேற்று மாலை எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், சுந்தரேஸ்வரியின் உடல் சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக சுந்தரேஸ்வரி உடலை மீண்டும் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து சுந்தரேஸ்வரி சாவில் மர்மம் நீடித்து வருகிறது. அவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், அவரது இறப்பு குறித்து சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகியும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- ஜெயங்கொண்டம் அருகே துப்புரவு தொழிலாளி மர்மமான முறையில் இறந்துள்ளார்
- பிணத்தை கைப்பற்றி கொலையா? என்று போலீஸ் விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு முன்பு ஒரு முதியவர் இறந்த நிலையில் கிடந்தார்.இதனை ப ார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வயது முதிர்வு காரணமாக இறந்திருப்பாரா அல்லது யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றார்களா என பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.விசாரணையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பருகம் காலனியை சேர்ந்தவர் முத்தையன் (வயது 60) என்பவதும், இவர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணி செய்து தற்போது வீட்டில் இருப்பதும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து ே பாலீசார் ,இறந்தவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
- தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இன்று பிற்பகல் 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) நுழைந்த ஒருவர் கையில் இருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை வைத்து மற்றவர்களை தாக்கியதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் நிலைமைகள் இன்னும் தெரியவில்லை என்று தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இனிமேல் யாரும் இங்கு வரவேண்டும் என்று காவல்துறை தரப்பில் இருந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
- கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.
மதுரை:
தமிழகத்தில் பல்வேறு சிறப்புகளையும் பெருமையும் கொண்ட பழமையான மதுரை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது.
இந்த மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் மதுரை, சோழவந்தான், உசிலம்பட்டி, மதுரை வன உயிரினச் சரகம், மதுரை சமூக நலக் காடுகள் சரகம், திருமங்கலம் சமூக நலக்காடுகள் சரகம் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.
இந்த வனச்சரகப் பகுதிகளில் அழகர்மலை, நாகமலை, யானைமலை, கொட்டாம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, அழகர்கோவில் மலை ஆகிய சிறுசிறு மலைகள் உள்ளது.
இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் இல்லாததால் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை, புலி, யானை போன்ற பெரிய வனவிலங்குகள் மதுரை மாவட்டத்தில் இல்லை என்றாலும் மான், காட்டுப் பன்றிகள், குரங்குகள், முயல்கள் உள்ளிட்ட சிறுசிறு வன விலங்குகளும், பறவைகளும் அதிக அளவில் வசிக்கின்றன.
கடந்த 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன உயிரினங்களும், பறவைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மர்மமான முறையில் மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இது தொடர்பான தகவலை அறியும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் கடந்த 2015 முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை எத்தனை வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது? எத்தனை வன விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது? எத்தனை வனவிலங்குகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டது? என்ற விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மதுரை வனக்கோட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பம் வந்தது.
இது தொடர்பாக அளித்துள்ள பதில் பல்வேறு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.
மதுரை வன கோட்டத்தை பொறுத்தவரை மயில், காட்டு மாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், குரங்கு உட்பட 28 அரிய வகை உயிரினங்கள், பறவைகள் ஊர்வன வகைகள் உயிரிழந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மயில் 435 உயிரிழந்ததுள்ளது. அதேபோல் புள்ளிமான் 258, காட்டு மாடு 71, காட்டுப்பன்றி 43, குரங்கு 40 என மொத்தமாக சுமார் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 93 வன உயிரினங்கள் சாலை விபத்தின் மூலம் மட்டும் உயிரிழந்துள்ளது.
மதுரை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் வன விலங்குகளுக்கு விஷம் வைத்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன உயிரினங்கள் உயிரிழக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வனக்கோட்ட அலுவலகம், வயல்வெளிகளில் மயில்களுக்கு விஷம் வைத்தல், சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வெளிகளில் வனவிலங்குகள் சிக்கி பலியாகிறது.
அரிய வகை உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுதல், வன விலங்குகள் வேட்டையாடிய அதன் இறைச்சி மற்றும் விலங்குகள் கறி தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயல்வெளிகளில் நெற்பயிரை உண்ண உணவு தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொலை செய்யும் சம்பவம் மதுரை அதை சுற்றியுள்ள பகுதியில் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு வனத்துறை சார்பாக உயிரினங்கள் வேட்டையாடுதல் மற்றும் வன உயிரினங்கள் குற்றம் தொடர்பாக கண்காணிக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு கீழ் நான்கு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு மண்டல வாரியாக வன காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வேட்டையாடும் முன்பாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மேலும் வனவிலங்குகள் வேட்டையாடுவது தொடர்பாக வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு வேட்டையாடும் சம்பவங்கள் அரங்கேறிய பகுதிகளில் வன அதிகாரிகளுடன் தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரையில் சிவப்பு பகுதி என்று அறியக்கூடிய பகுதிகளில் அதிக வனவிலங்குகள் உயிரிழந்த பகுதிகளாக மதுரை ரெயில் நிலையம், சூர்யா நகர் ஆண்டார்கொட்டாரம் உள்ளிட்டவற்றில் அதிக அளவு மயில்கள் இறந்துள்ளது. சிவரக்கோட்டை, திருமங்கலம், கள்ளிக்குடி, உசிலம்பட்டி பகுதியில் புள்ளி மான்கள் உயிரிழப்பு அதிகம் உள்ளது. உசிலம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, உள்ளிட்ட பகுதியில் காட்டுப்பன்றி உயிரிழப்பு அதிகம் உள்ளது.
மேலும் தமிழ்நாடு வனத்துறை சார்பாக இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டதன் மூலம் பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், படிப்படியாக வனவிலங்குகள் மீது தாக்குதல் மற்றும் வனவிலங்குகள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் வாழ்வியல் முறைகள்,வன விலங்குகள், காடுகளை சார்ந்தே இருந்துள்ளது.
இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நிற்கக்கூட நேரமில்லாமல் எந்திர மயமாகி விட்டதால் வனவிலங்குகள், காடுகளின் மதிப்பு தெரியவில்லை. காடுகளையும், அதில் வாழும் விலங்குகளையும் பாதுகாக்க தவறியதால் தற்போது சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளும், காடுகளும் ஒன்றையொன்று சார்ந்தது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக அழிந்து விடும்.
அதனால் இந்த வன விலங்குகளை பாதுகாக்க வனவிலங்கு காப்பகங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்களும் ஒத்துழைப்புகள் நல்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் தருண்குமார் கூறுகையில், வறட்சி காலங்களில் சாலை விபத்து மூலம் வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் வனவிலங்குகள் அருந்தும் வகையில் உணவுகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சாலையை கடக்கும் குறிப்பிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வன விலங்குகளை உயிரிழக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிர படுத்தப்பட்டுள்ளது. வேட்டையாடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது வன விலங்குகள் வேட்டையாடும் சம்பவங்கள் படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை மருத்துவரான அவரது சகோதரர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடவே விஷயம் பூதாகரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர். ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை ஓரளவு கிடைத்துள்ளது.

அதாவது ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் சமீபத்தில் ஆலையில் நடந்த விபத்தில் தனது விரலை இழந்துள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் விரலில் உள்ள டி.என்.ஏ.வும் அந்த நபரின் டி.என்.ஏவும் ஒத்துபோகும் பட்சத்தில் இந்த மர்மத்துக்கு முழுமையான விடை கிடைக்கக்கூடும்.