என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "naga chaithanya"
- சென்னை-28, மங்காத்தா, மாநாடு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு.
- இவர் இயக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் 'மன்மத லீலை'. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி இப்படத்தின் மூலம் முதன்முறையாக இணையவுள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி மட்டுமே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கஸ்டடி.
- இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.
'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், 'கஸ்டடி' திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here it is ! the trailer of #Custody
— chaitanya akkineni (@chay_akkineni) May 5, 2023
Can't wait for you all to experience the hunt in theatre's on May 12th
Telugu - https://t.co/uOriDVxa42
Tamil - https://t.co/GkiQwNjHut#CustodyTrailer#CustodyOnMay12@realsarathkumar @vp_offl @thearvindswami @ilaiyaraaja @thisisysr… pic.twitter.com/3fFjRyuYOH
- இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் என்.சி.22.
- இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் என்சி22 படம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கதையின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் அரவிந்த் சுவாமி இணைந்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் கீர்த்தி ஷெட்டி, சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்று உள்ளனர்.
- நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.
- கடந்த வருடம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் சமந்தா ஐதராபாத்தில் குடியேறி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். கடந்த வருடம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். திருமண முறிவுக்கான காரணத்தை இதுவரை இருவரும் வெளியிடவில்லை.
தற்போது இருவரும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யாவும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக தகவல் பரவியது. சோபிதாவை தனது வீட்டுக்கு நாகசைதன்யா அழைத்து சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு பட உலகினர் பேசி வந்தனர்.
இந்நிலையில் நடிகை சமந்தாவும் 2-வது திருமணத்துக்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி நடிகர் ஒருவரை சமந்தா காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் சமந்தா தரப்பில் இதனை மறுத்துள்ளனர்.
- இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ள படம் லால் சிங் சத்தா.
- இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
லால் சிங் சத்தா படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ராணுவ அதிகாரி பாலராஜு வேடத்தில் நாக சைதன்யா நடித்திருக்கிறார். இதுவரை இந்தி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நாக சைதன்யா இந்தப்படத்தில் நடித்ததற்கான காரணம் பற்றி கூறியதாவது, நான் சென்னையில் வளர்ந்து ஐதராபாத்தில் குடியேறினேன். எனவே, எனது இந்தி சிறந்ததாக இல்லை. நான் நீண்ட காலமாக அதைப் பற்றி ஒருவித பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறேன். அதனால்தான் சில சமயங்களில் இந்தி படங்களில் வாய்ப்பு வந்தவுடன் விலகிவிட்டேன்.
உண்மையில், நான் 'தென்னிந்தியன்' என்று அவர்களிடம் சொன்னபோது, மக்கள் இருமுறை யோசித்திருக்கிறார்கள். லால் சிங் சத்தா படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் வடக்கே செல்லும் தென்னிந்தியப் பையனாக நான் நடிக்கிறேன், எங்கள் பயணம் அங்கிருந்துதான் தொடங்குகிறது. நான் பேசும் விதத்தில் தென்னிந்தியா சாயல் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
நான் படத்தில் இந்தி பேசுகிறேன், ஆனால் நான் ஒரு தெலுங்கு வார்த்தையை பேசுவது போல இந்தியை பயன்படுத்தினேன். ஒரு தெலுங்கு சுவையை கொண்டு வருவதற்காக சில வார்த்தைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக இணைத்துள்ளோம் என்றார்.
- நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- இவர்கள் கடந்த ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றனர். அவர்கள் பிரிவுக்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடந்தும் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் அமீர் கானின் லால்சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை விவாகரத்து செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் கோபமான நாகசைதன்யா கூறும்போது, "எனது சொந்த வாழ்க்கையை பற்றி பேசுவதை கேவலமாக நினைக்கிறேன். நான் ஒரு நடிகன். எனது நடிப்பை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சொந்த வாழ்க்கையை பற்றி மற்றவர்கள் பேசுவதை விரும்பவில்லை. சினிமா வாழ்க்கையை விட நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைத்தான் பரபரப்பாக்குகிறார்கள். சினிமா துறையில் நான் சாதித்ததை பற்றி யாரும் பேசுவது இல்லை.
எங்கள் திருமண வாழ்க்கை முடிந்து போன அத்தியாயம். அதை நானும், சமந்தாவும் அறிக்கையாக வெளியிட்டோம். அது குறித்து இப்போது புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் வழி அவருடையது. என் வழி என்னுடையது. இந்த விஷயத்தில் இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை. தயவு செய்து என்னை இந்த விஷயத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்