search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nallaru-Anaimalayaru Dam"

    • இலுப்பு நகரம் செல்லும் பழுதடைந்த தார் சாலையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.
    • வண்டல் மண் எடுக்க எளிய முறையில் அனுமதி வழங்க வேண்டும்.

    குடிமங்கலம் :

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குடிமங்கலம் ஒன்றிய மாநாடு எஸ்.வல்லகுண்டாபுரத்தில் நடந்தது.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மகேந்திரன் மாநாட்டுக்கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் குமார் மாநாட்டை தொடங்கி வைத்தார்.மாநில துணைத்தலைவர் மதுசூதனன், ஒன்றிய அமைப்புக்குழு ஸ்ரீதர், கொண்டம்பட்டி கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மனோகர், மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில்நல்லாறு- -ஆனைமலையாறு அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பற்றாக்குறை உள்ள நிலையில் பி.ஏ.பி., நீரை ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது.உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு, ரூ.40 வழங்க வேண்டும். குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள உப்பாறு கரைப்பகுதியில் உள்ள சீமை கருவேலன் மரங்களை உடனே அகற்ற வேண்டும்.சின்ன வெங்காயம் பயிர் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். எஸ்.வல்லகுண்டாபுரம் முதல் இலுப்பு நகரம் செல்லும் பழுதடைந்த தார் சாலையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.

    குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள குளம் குட்டைகளில் வண்டல் மண் எடுக்க எளிய முறையில் அனுமதி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    ×