search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nallathankal stream dam"

    • உடையார் குளத்திற்கு 12.96 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்படுகிறது.
    • 26 நாட்கள் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க பாசன பகுதியில் உள்ள 4 ஆயிரத்து 744 ஏக்கர் பரப்பளவிலான பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும், நல்லதங்காள் பிரதான கால்வாய் மதகு வழியாக 21-ந் தேதி (நாளை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி வரை 42.34 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், உடையார்குளம் பாசன பகுதியில் உள்ள 87.36 ஏக்கர் பரப்பளவிலான பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், ஆற்று மதகு மூலம் நல்லதங்காள் ஓடை வழியாக உடையார் குளத்திற்கு 12.96 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்படுகிறது.

    இதன்மூலம் மொத்தம் 4,831.36 ஏக்கர் நிலங்களுக்கு 55.30 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தகுந்த இடைவெளி விட்டு 26 நாட்கள் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×